மத்திய அமைச்சரவை

பேரிடர் மேலாண்மைத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா-ஆர்மீனியா இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 12 SEP 2017 5:03PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பேரிடர் மேலாண்மைத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா-ஆர்மீனியா இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை, பேரிடர் மேலாண்மைத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும். பேரிடர் ஏற்படும் சமயங்களில், இரு நாடுகளையும் சேர்ந்த மக்களின் பாதுகாப்புக்கும், நலனுக்கும் பங்களிப்பை செய்யும். பேரிடர் மேலாண்மைத் துறைகளில், பரஸ்பரம் நலன் சார்ந்த தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் வழிவகை செய்யும்.

மேலும், இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையானது, ஒரு வழிமுறையை ஏற்படுத்தச் செய்கிறது. இதன்மூலம், மற்ற நாட்டின் பேரிடர் மேலாண்மை வழிமுறைகளிலிருந்து இந்தியாவும், ஆர்மீனியாவும் பரஸ்பரம் பயனடையும். இது பேரிடர் சமயங்களில் தயார்படுத்திக் கொள்தல், மீட்பு மற்றும் திறன் வளர்ப்பு ஆகிய துறைகளில் வலுப்படுத்திக் கொள்ள உதவும்.

****


(Release ID: 1502579) Visitor Counter : 70


Read this release in: English