கலாசாரத்துறை அமைச்சகம்

பண்டைய ஆவணங்களைக் காப்பதில் இந்தியா மற்றும் போர்ச்சுகல் இடையே ஒத்துழைப்புக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியது

Posted On: 20 JUN 2017 3:58PM by PIB Chennai

இந்திய தேசிய ஆவணக் காப்பகமும் போர்ச்சுக்கீசிய குடியரசின் கலாச்சார அமைச்சகமும் 17 மே 2017 அன்று, லிஸ்பனில், பண்டைய ஆவணங்களை காப்பதற்கு ஒத்துழைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின் முதல்படியாக போர்ச்சுகீசிய தேசிய ஆவணக் காப்பகமான தொர்ரே தோ தோம்போ மழைக்கால கடிதங்கள் (மங்கோல் தோ ரெய்னோ) என்னும் 62 தொகுப்புகளின் மின்னணு வடிவத்தை இந்திய தேசிய ஆவணக் காப்பகத்திற்கு வழங்கியது

 

இந்தத் தொகுப்பு 1568 ஆம் ஆண்டு முதல் 1914 ஆம்  ஆண்டு வரையுள்ள காலகட்டத்தில் எழுதப்பட்ட 456 தொகுப்புகளின் ஒரு பகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது. கோவா அரசு ஆவணக்காப்பகத்தின் பாதுகாப்பிலுள்ள பதிவுகளில் மிகப் பெரியது இந்த தொகுப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

போச்சுக்கல் தலைமையகமான லிஸ்பனில் இருந்து கோவா நிர்வாகத்துடன் நடத்திய கடிதப் போக்குவரத்து, ஆசியாவில் போர்ச்சுகல் ஆதிக்கத்தின் விரிவாக்கம், அவர்கள் அரபு நாடுகளுடனும் பிற ஐரோப்பிய நாடுகளுடனும் கொண்டிருந்த வணிகப் போட்டிகள், தெற்காசியா மற்றும் கிழக்கு ஆசியாவிலுள்ள அரசர்களுடன் கொண்டிருந்த உறவுகள் பற்றி தெரிந்து கொள்ள இந்தத் தொகுப்பு முதன்மையான ஆதாரங்களை வழங்குகிறது.

 

1605 ஆம் ஆண்டு முதல் 1651 ஆம் வரையிலான காலகட்டம் சம்பந்தப்பட்ட, இந்த 62 தொகுப்பில், 12000 ஆவணங்கள் இடம் பெற்றுள்ளன. 1777ல் இந்த தொகுப்புகள் கோவாவிலிருந்து லிஸ்பன் நகருக்குள் கொண்டுசெல்லப்பட்டு. பிறகு அவை லிஸ்பனிலிருந்த அறிவியல் கழகத்தால், 1880 முதல் 1993 வரையிலான  காலகட்டத்தில் (டாகுமெண்டோஸ் ரெமெடிடோங் டா இந்தியா) இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட ஆவணங்கள் என்னும் தலைப்பில் அச்சிடப்பட்டன. அசல் தொகுப்பு நூல்கள் லிஸ்பனில் வைக்கப்பட்டுள்ளன.

 

கோவா ஆவணத் தொகுப்பில் இருந்த குறைபாடு 240 ஆண்டுகளுக்குப் பிறகு சரிசெய்யப்பட்டது. இந்த ஆண்டு மே மாதம் 17ம் தேதி இந்தியாவின் போர்ச்சுகலுக்கான தூதர் மேன்மை தங்கிய கே. நந்தினி சிங்லா, போச்சுக்கல் அரசின் கலாச்சார ஒப்பந்தங்கள், திட்டங்கள்  ஒத்துழைப்பு துறைத்தலைவர் திருமதி தெரசா ஆர்டிலீரோ பெரெய்ரா ஆகியோர் கலந்துகொண்ட நிகழ்வில், புத்தகங்கள் ஆவணங்கள் நூலகங்கள் பிரிவு தலைமை இயக்குநர் முனைவர் சில்வெஸ்டர் தி அல்மெய்டா லேசர்டா (மங்கோஸ் தொ ரெய்னோ) மழைக்கால கடித தொடர்புகள் தொகுப்பின் விடுபட்ட மின்னணு வடிவங்களை இந்திய அரசுச் செயலர் மற்றும் ஆவணக்காப்பக பொது இயக்குநர் திரு இராகவேந்திர சிங் அவர்களிடம் வழங்கினார். திரு இராகவேந்திர சிங் போர்ச்சுகலுக்கு சென்றிருந்த இருவர் குழுவுக்குத் தலைமை தாங்கி சென்றிருந்தார்.

 

இந்த நிகழ்வில் பேசிய திரு சிங், இந்திய ஆவணக்காப்புத் துறை மற்றும் போர்ச்சுகள் ஆவணக்காப்பக துறையோடு நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்பட விரும்புவதாக தெரிவித்தார் இது ….காலமாக இருநாடுகளுக்கும் இடையே இருந்துவரும் உறவுகளை மேலும் துடிப்புடனும், அர்த்தமுள்ளதாகவும் இருக்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த ஆண்டு ஜனவரியில் போர்ச்சுகல் பிரதமர் இந்தியாவுக்கு வந்த வெற்றிகரமான பயனத்திற்குப் பிறகு இருநாடுகளுக்கும் இடையே தொழில் நுட்பம் முதல் கல்வி உள்ளிட்ட துறைகள், விமானப் போக்குவரத்து முதல் கால்பந்தாட்டம் வரை இரு நாடுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மேம்பட்டு உள்ளது என்றார்

 

கலாச்சாரம் நமது மக்களின் வாழ்வில் முக்கியப்பங்கு வகிப்பதால் இந்த முக்கியமான வரலாற்றுப் பெருமை மற்றும் பாரம்பரிய நினைவுகளைப் பாதுகாப்பது அனைவராலும் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

 

* லிவரோ தாஸ் மங்கோஸ் தொ ரெய்னோவின் ஒரு படம்

 

போர்ச்சுகல் தேசிய நூலக, புத்தக, ஆவண இயக்குனர் முனைவர் அல்மெய்ரோ லே சராடாவிடமிருந்து 'லிவரோ தாஸ் மங்கோஸ் தோ ரெய்னோ'வின் 62 பெருநூல்களின் மின்தொகுப்பை இந்திய தேசிய ஆவணங்களின் இயக்குனர் திரு இராகவேந்திர சிங் பெறுகிறார். போர்ச்சுகலுக்கான இந்தியத் தூதர் மேன்மை தங்கிய கே. நந்தினி சிங்ளா உடனிருக்கிறார்.

 

*******

 

 

 

 

 


(Release ID: 1502572) Visitor Counter : 68
Read this release in: English