வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

அறிவுசார் சொத்து உரிமைகள் திட்டம் குறித்த விழிப்புணர்வு -- படைப்பாற்றல் இந்தியா; புதுமை இந்தியா

Posted On: 07 JUL 2017 1:32PM by PIB Chennai

தேசிய அறிவுசார் சொத்து உரிமைகள் கொள்கை( பி ஆர்)  2016 முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன்,  ‘ஐபிஆர் விழிப்புணர்ச்சி திட்டம்படைப்பாற்றல் இந்தியா; புதுமை இந்தியா’  ஐபிஆர் விரிவாக்கம் மற்றும் மேலாண்மை குழு (சிஐபிஏஎம்) தொழிலகக் கொள்கை மற்றும் வளர்ச்சித்துறையின் பொறுப்பிலுள்ளதால் தொடங்கப்பட்டுள்ளது.

     மாணவர்கள், இளையோர், நூலாசிரியர்கள், கலைஞர்கள்மலர்ந்துவரும் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில்வல்லுநர்  ஆகியோர் மத்தியில் ஐபிஆர்  விழிப்புணர்வை உயர்த்தி அவர்கள் படைக்கவும் , புதுமையைப் புகுத்தவும் மற்றும் அவர்களின் படைப்புக்கள் மற்றும் கண்டுபிடிப்புக்கள் ஆகியவற்றைப் இந்தியா முழுவதிலும் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களோடு கிராமப்புறப் பகுதிகளிலும் அடுத்துவரும் மூன்று ஆண்டுகளில்  பாதுகாக்கவும்  படைப்பாற்றலைத்தூண்டுதலை நோக்கமாக கொண்டு இத்திட்டம் இயங்குகிறது.

ஐபிஆர் விழிப்புணர்ச்சித்திட்டம் 4000 ஐபிஆர் விழிப்புணர்வு பணிமனைகள்/கருத்தரங்குகள் கல்வி நிறுவனங்களில் (பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்) மற்றும் எம் எஸ் எம் ஈஸ் மற்றும் தொடக்கக் கூடங்கள் உள்ளடக்கிய  தொழிலகங்கள், பி பயிற்சி மற்றும் உணர்வூட்டும் நிகழ்வுகள் செயற்பாட்டை உறுதிப்படுத்தும் அமைப்புகள் மற்றும் நீதித்துறை  ஆகியவற்றின் நலங்கருதி நடத்த  முயற்சிசெய்கிறது. அனைத்துலக பதிவுசெய்யும் வழிமுறைகள், பூகோளக் குறிப்புகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துதல் மற்றும் போலித்தனம், கொள்ளை ஆகியவற்றின் தீய விளைவுகள் ஆகியவற்றை கோடிட்டுக்காட்டி    எல்லா முக்கிய தலைப்புகளையும்  பணிமனைகள் பயிற்சிக்கு எடுத்துக்கொள்ளும்.

     ஐபி ஆர் விழிப்புணர்வுத் திட்டம் புதுமை மற்றும் மேலாண்மை வளர்ச்சியைக்  கருத்தில் கொண்டு பங்குதாரர் நிறுவனங்கள்  மூலமாக நிறைவேற்றப்படும். இது குறித்த முழுவிவரங்களை இணையப்பக்கம் http://dipp.nic.in / what is new /scheme-ipr-awareness ல் காணலாம்.

*****
 

 

 


(Release ID: 1502467) Visitor Counter : 188


Read this release in: English