விவசாயத்துறை அமைச்சகம்
இந்திய பொருளாதாரம் தொடர்ச்சியான வளர்ச்சியைப் பெறுவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது: திரு இராதா மோகன் சிங்
கடந்த ஒருசில ஆண்டுகளாக, ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் முக்கிய பயிர்களான நெல், சோளம், காய்கறி மற்றும் மஞ்சள் ஆகியவற்றின் மகசூலை அதிகரிப்பதில் எழுச்சியூட்டும் வெற்றியைப் பெற்றிருக்கிறது:
Posted On:
04 JUL 2017 2:05PM by PIB Chennai
மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலம் அமைச்சர் திரு இராதா மோகன் சிங் இந்திய பொருளாதாரம் தொடர்ச்சியான வளர்ச்சியைப் பெறுவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று சொன்னார்: இந்தியா உலகத்திலுள்ள பெரிய பொருளாதார சக்திகளுல் ஒன்றாக விவசாயத்தோடு தொடர்புடைய தொழில்களை விரிவாக்குவதால் ஆகக்கூடும். இத்தொழில் மனைகளில் விவசாயப்பொருள்கள் சேமித்துவைக்கப்படுவதோடு செய்முறைக்கு உட்படுத்தப்பட்டு சந்தைக்குக் கொண்டுவரப்படுகின்றன. இதை திரு சிங் ஸ்ரீநகர் விவசாயிகளிடம் பேசிக்கொண்டிருக்கும்போது சொன்னார்.
பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி விசாயத்தின் முக்கியத்துவத்தையும் இந்திய பொருளாதாரத்திற்கு அதன் பங்களிப்பைப்பற்றியும் நன்றாக உணர்ந்திருக்கிறார் என்றும் திரு இராதா மோகன் சிங் குறிப்பிட்டார். ஆகையால் விவசாயிகளின் நலங்கருதி அவர் பலதொடர் திட்டங்களை தொடங்கிருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளில் புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டவை மண்வள அட்டைகள் வழங்கல், தண்ணீர் பாய்ச்சும் வசதிகள் விரிவாக்கம் , குறைந்த செலவில் இயற்கைமுறை விவசாயம், தேசிய விவசாயச் சந்தை, தோட்ட வேளாண்மை வளர்ச்சி, விவசாயக்காடுகள் வளர்த்தல், தேனீ வளர்த்தல் பால், மீன் மற்றும் முட்டை உற்பத்தி மற்றும் முன்னுரிமைப்படி விவசாயக்கல்வி ஆகியவற்றை உள்ளடக்கும்.
பிரதம மந்திரி அவருடைய கனவான 2022 வாக்கில் பிரைலியுலுள்ள விவசாயிகளின் வருமானத்தை இரண்டுமடங்காக ஆக்கிக்காட்டுவதைப்பற்றி பிப்ரவரி 2016 லியே தெளிவு படுத்தினார் என்றும் திரு சிங் சொன்னார். அதற்காக புதிய திட்டங்களை தொடங்கியதோடு மட்டுமல்லாமல் போதுமான நிதியுதவியும் செய்தார்.கடந்த மூன்று ஆண்டுகளில் , அரசாங்கம் ஐந்து முக்கிய பகுதிகளில் விவசாய உற்பத்தி மற்றும் விவசாயி வருமானம் ஆகியவற்றை அதிகப்படுத்த கீழ்கண்ட பயனுள்ள யுக்திகளை நடைமுறைக்குக்கொண்டு வந்துள்ளது:
- வேம்பு பூசப்பட்ட யூரியா உற்பத்தி
- இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து பயிர்ச்செலவைக்குறைத்தல். அரசாங்கம் DAP உரத்தின் விலையை டண்ணுக்கு ரூ. 2500 ஆக MoP உரத்தின் விலையை டண்ணுக்கு ரூ. 5000 ஆக குறைத்துள்ளது.
- நில வள அட்டை வழங்கும் திட்டத்தைத் துவங்கி உற்பத்தியைப்பெருக்குதல் , ஒவ்வொரு வயலுக்கும் பிரதம மந்திரி கிருஷி சின்ச்சை யோஜனா திட்டத்தைப்பயன்படுத்தி தண்ணீர் வழங்கிடல் மற்றும் பரம்பரகாட் கிருஷி விகாஸ் யோஜனா திடத்தைப்பயன் படுத்தி விவசாயச் செலவைக் குறைத்தல்.
- அரசாங்கம் நாடுமுழுவதும் விவசாயிகளுக்கு வெளிப்படையான சந்தையை உருவாக்க மின்னணு பெயர் வழங்கும் முறையைத்தொடங்கி இருக்கிறது.
- இதே வழியில் அரசாங்கம் பல நிகழ்வுகளான விலங்கு பாதுகாப்பு, பால் உற்பத்தி, தோட்ட வேளான்மை,, விவசாயக் காடுகள், கோழிப்பண்ணை, மீன் வளர்த்தல், தேனீ வளர்த்தல், மெட் பர் பெட் முதலியவற்றைத் தொடங்கி இருக்கிறது
மத்திய விவசாய அமைச்சர் ஜம்மு மற்றும் காஷ்மீர் ஒவ்வொரு ஆண்டும் 7 இலட்சம் டண் உணவுத் தானியங்களை இறக்குதி செய்ய வேண்டிய உணவுப்பற்றாக்குறை உள்ள மாநிலமாக இருக்கிறது என்று குறிப்பிட்டார். உற்பத்திப் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் தட்பவெட்ப மற்றும் பூகோளம் சார்ந்த ஒரேபயிர் விளையும் பகுதியாக இருப்பது. இயந்திரப் பயன்பாடு மற்றும் அறிவியல் சார்ந்த நடைமுறைகளை அனுமதிக்காத சிறிய துண்டு துண்டுகள் அடங்கிய நிலப்பகுதி மற்றும் விவசாய நிலங்களை விவசாயமல்லாத தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளல் முதலியன மற்ற காரணங்களாகும். உணவுத்தானிய உற்பத்தி மற்றும் உணவுப்பயன்பாடு ஆகிய இரண்டுக்கும் இடையே உள்ள இடைவெளியைக்குறைக்க, இம்மாநிலம் பல்வகைப் பயிர் உணவுப்பயிர் உள்ளிட்ட உற்பத்தியை பெருக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறது. இந்த நோக்கத்தை நிறைவேற்றிட இம்மாநிலம் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை அரசாங்க உதவியுடன் நிறைவேற்றிவருகிறது. கிடைத்திருக்கின்ற புள்ளி விவரங்களின் படி இந்த மாநிலம் நெல் , சோளம், காய்கறி மற்றும் மஞ்சள் ஆகியவற்றின் உற்பத்தி அளவை அதிகரிப்பதில் எழுச்சியூட்டும் வெற்றிகளைப்பெற்று வருகிறது.
அரசாங்கம் ரூ 500 கோடிக்கான ஒரு சிறப்புநிதி உதவித்திட்டத்தை நலிவடைந்துள்ள தோட்ட வேளாண்மையை சீர் செய்வதற்காக அம்மாநில அரசின் 2016-19 ஆண்டுகளுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள திட்ட வேண்டுகோளை கருத்தில் கொண்டு அறிவித்து உள்ளதாக திரு சிங் சொன்னார். தேசிய தோட்டகலை வாரியம் பாம்போர், புல்வாமாவில் மஞ்சள் பூங்கா அமைக்க ரூ. 24.45 கோடி நிதி உதவியுடன் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த பூங்கா தரக்கட்டுப்பாடு சோதனைக்கூடம், ஏற்றுமதி அபிவிருத்திச் செயல்கள் மற்றும் மின்னணு ஏல மையம் ஆகிய வசதிகளைப்பெற்றிருக்கும். இந்த பூங்கா நவம்பர் 2017ல் செயல்படத் துவங்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் (2015-16 & 2016-17), முதலமைச்சரின் முயற்சிகள் மத்திய அரசால் ஆதரிக்கப்பட்ட திட்டங்களின் உதவியுடன் இம்மாநிலத்தில் குறிப்பிடத்தக்க நிறைவேற்றங்கள் செய்யப்பட உதவியுள்ளன.
*********
(Release ID: 1502463)