உள்துறை அமைச்சகம்

மத்திய உள்துறை அமைச்சர், கர்நாடகாவுக்கு மத்திய நிதி உதவிக்கான உயர்மட்டக் குழுவின் கூட்டத்துக்குத் தலைமையேற்பு

प्रविष्टि तिथि: 29 JUN 2017 12:43PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங், கர்நாடகாவுக்கு 2016-17 ஆண்டு ரபி பருவ வறட்சியை முன்னிட்ட மத்திய நிதி உதவிக்கான இன்றைய உயர்மட்டக் குழுவின் கூட்டத்துக்குத் தலைமையேற்று நடத்தினார்.

நிதி, கூட்டாண்மை விவகாரம் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. அருண் ஜேட்லி, விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர் திரு.ராதா மோகன் சிங் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். உள்துறை விவகாரங்கள், நிதி மற்றும் விவசாய அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட கர்நாடக மாநிலத்தில் ஆய்வுசெய்த 'அமைச்சகங்களுக்கிடையிலான மத்திய குழு'வின் அறிக்கையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட திட்ட முன்மொழிவினை இக்குழு பரிசீலித்தது. இந்த உயர்மட்டக் குழு, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (என்டிஆர்எப்) ரூ.795.54 கோடியை கர்நாடகாவுக்கு வழங்க ஒப்புதல் அளித்ததது.


(रिलीज़ आईडी: 1502454) आगंतुक पटल : 78
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English