பிரதமர் அலுவலகம்

பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய சிகாகோ உரையின் 125வது ஆண்டுவிழா கொண்டாட்டங்களில் மாணவர்களிடையே பிரதமர் உரை ஆற்றினார்.

Posted On: 11 SEP 2017 1:47PM by PIB Chennai

புது தில்லி விஞ்ஞான் பவனில் நடந்த பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய சிகாகோ உரையின் 125வது ஆண்டுவிழா கொண்டாட்டங்களில் மாணவர்களிடையே பிரதமர் ஆற்றிய உரை.

இப்போது இந்நாள் 9/11 என்று உலக அளவில் அழைக்கப்படுகிறது. ஆனால் 125 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இந்திய இளைஞர் ஒருவர் ஒற்றுமையின் சிறப்பை வலியுறுத்திப் பேசி ஒட்டுமொத்த உலகின் நன்மதிப்பைப் பெற்றார். 1893ஆம் ஆண்டின் 9/11 முழுமையாக மகிழ்ச்சியையும், சகோதரத்துவத்தையும் பறைசாற்றிய நாளாக இருந்தது.

நம் சமூகத்தில் நுழைந்துவிட்ட சமூகக் கேடுகளை எதிர்த்து சுவாமி விவேகானந்தர் குரல் கொடுத்தார். மேலும் யாகங்கள் செய்தெல்லாம் இறைவனை அடைய முடியாது, மக்கள் சேவையின் மூலமே இறைவனை அடையமுடியும் என விவேகானந்தர் நம்பியதாக பிரதமர் குறிப்பிட்டார்.

அதேபோல பிரச்சாரங்களில் சுவாமி விவேகானந்தருக்கு நம்பிக்கை இல்லை. அவரது தத்துவங்களும், எண்ணங்களும்தான் இன்று ராமகிருஷ்ண மடத்தை செயல்படவைக்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியாவை தூய்மையான மாநிலமாக வைத்திருப்பதற்காக அயராது பாடுபடும் ஒவ்வொருவரையும் பிரதமர் பாராட்டினார். வந்தே மாதிரம் என்கிற கோஷத்தின் அர்த்தத்தை முழுமையாக உள்வாங்கியது அவர்கள்தான் என்றும் குறிப்பிட்டார். பல்கலைக்கழக தேர்தல்களுக்கு பிரச்சாரம் செய்கையில் மாணவர் அமைப்புகள், தூய்மைக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார். மேலும் பெண்கள் மீது நன்மதிப்பு வைத்திருப்பவர்கள் மட்டுமே விவேகானந்தரின், “எனதருமை அமெரிக்க சகோதர சகோதரிகளே,” எனும் சொற்றொடர்களின் மீது உரிமை கொண்டாட முடியும் என்றும் பிரதமர் பேசினார்.

சுவாமி விவேகானந்தருக்கும் ஜேம்ஷட்ஜி டாட்டா அவர்களுக்குமிடையில் இருந்த கடிதத் தொடர்புகள் இந்தியாவின் தன்னிறைவின் மேல் சுவாமி விவேகானந்தருக்கு இருந்த பிடிப்பை காட்டும். ஒருவரின் முன்னேற்றத்திற்கு அறிவும், திறனமும் ஒருங்கே தேவை என்றும் பிரதமர் குறிப்பிட்டார்..

இந்த 21ஆம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு. ஆனால் பல்லாண்டுகளுக்கு முன்பே சுவாமி விவேகானந்தர், ‘ஒரே ஆசியா’ என்கிற தத்துவத்தைக் கொடுத்து, உலகின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் எல்லாம் ஆசியாவிலிருந்தே வரும் என்றும் கூறிச்சென்றுவிட்டார்.

பல்கலைக்கழக வளாகத்தைவிடவும் ஆக்கத்திறனையும், புத்தாக்கத்தையும் வெளிக்கொணரும் இடம் வேறில்லை என்றும், மாநிலங்களின் கலாச்சாரம் மற்றும் மொழியைக் கொண்டாடுவதற்கு பல்கலைக்கழகங்கள் ஏற்பாடு செய்யவேண்டும் என்றும், ‘ஒன்றுபட்ட பாரதம் ஒப்பற்ற பாரதம்,’ கொள்கைக்கு அதுவே வலுசேர்க்கும் என்றும் பிரதமர் பேசினார்.

இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது, உலக அளவில் இந்தியாவின் இடம் வலுப்பெறுகிறது என குறிப்பிட்ட பிரதமர், அது நமது மக்கள் சக்தியால் தான் சாத்தியமாகிறது என்றும் குறிப்பிட்டார். “விதிகளை கடைபிடியுங்கள்; இந்தியா விதிமுறைகளை விதிக்கும் இடத்திற்கு முன்னேறும்,” எனக் இறுதியாகக் குறிப்பிட்டு மாணவர்களிடையே தான் ஆற்றிய உரையை முடித்தார் பிரதமர்.
 

***


(Release ID: 1502433) Visitor Counter : 124


Read this release in: English