பிரதமர் அலுவலகம்
இலங்கை வெளியுறவு அமைச்சர் திரு. திலக் மரப்பன பிரதமரை சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
09 SEP 2017 7:11PM by PIB Chennai
இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. திலக் மரப்பன, புது தில்லியில் இன்று பகல் பிரதமர் திரு. நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. திலக் மரப்பன, மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். “இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றமைக்காக திரு. திலக் மரப்பனவை பிரதமர் வாழ்த்தினார். சர்வதேச விசாக நாளை முன்னிட்டு இந்த ஆண்டு மே மாதம் இலங்கைக்கு தாம் மேற்கொண்ட பயணம் குறித்து பிரதமர் அப்போது குறிப்பிட்டார்.
இலங்கையுடனான தனது உறவுகளுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என்று பிரதமர் உறுதியளித்தார். இரு நாடுகளும் விரிவான மற்றும் ஆழமான உறவுகளை அனுபவித்து வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். இரு நாடுகளின் ஒத்துழைப்பை பலப்படுத்தி விரிவுபடுத்த இலங்கை அதிபர் மற்றும் பிரதமருடன் நெருங்கி உறவாடி தொடர்ந்து பணியாற்ற தாம் எதிர்நோக்குவதாக பிரதமர் தெரிவித்தார்.
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1502430)
வருகையாளர் எண்ணிக்கை : 174