பிரதமர் அலுவலகம்

யாங்கூனில் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் உரை

Posted On: 06 SEP 2017 10:20PM by PIB Chennai

மியான்மர் நாட்டில் யாங்கூன் நகரில் இந்தியர்கள் மத்தியில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.

கூட்டத்தில் பேசிய பிரதமர், ``இந்தியா மற்றும் மியான்மரின் மூத்த முன்னோடிகளின் விருப்பங்கள் மற்றும் சாதனைகள், பூகோள மற்றும் வரலாற்று, கலாச்சார மற்றும் நாகரிக அம்சங்களை பல்லாயிரம் ஆண்டுகளாக பகிர்ந்து கொண்டிருப்பதை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களாக நீங்கள் இருக்கிறீர்கள்'' என்று கூறினார். மியான்மரின் ஆன்மிக பாரம்பரியத்தின் பெருமைகள் குறித்து பிரதமர் விரிவாகப் பேசினார்.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இந்தியாவுக்கான ``ராஷ்ட்ரிய தூதர்கள்'' போன்றவர்கள் ன்று பிரதமர் கூறினார். யோகா கலையை உலக அளவில் மக்கள் ஏற்றுக் கொண்டது வெளிநாடு வாழ் இந்தியர்களின் சாதனை என்று கூறிய அவர், அவர்கள்கான் இதை உலகின் எல்லா மூலைகளுக்கு கொண்டு போய் சேர்த்தார்கள் என குறிப்பிட்டார்.

``உங்களை நான் சந்திக்கும்போது, வெளிநாடுகளில் வாழும் நமது மக்கள் இந்தியாவில் உள்ள அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வது இனியும் ஒருவழி தகவல் தொடர்பாக இருக்காது என்று உணர்கிறேன்'' என்று பிரதமர் கூறினார்.

``நமது நாட்டை நாங்கள் சீரமைப்பது மட்டுமின்றி, மாற்றத்தையும் ஏற்படுத்துகிறோம்'' என்று பிரதமர் உறுதிபடக் கூறினார். ஏழ்மை இல்லாத, பயங்கரவாதம் இல்லாத, ஊழல் இல்லாத, வகுப்புவாதம் இல்லா, ஜாதி இல்லாத ஒரு இந்தியா உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள மத்திய அரசு கட்டமைப்பு விஷயத்தில் கவனம் செலுத்துகிறது என்று பிரதமர் கூறினார். நல்ல கட்டமைப்பு வசதி என்பது இனிமேலும் சாலைகள் மற்றும் ரயில்வே வசதிகளுடன் நின்றுவிடாது - சமூகத்தில் வாழ்க்கை நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கியதாக அது இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். கடினமாக இருக்கும் முடிவுகளை எடுப்பதில் அரசு தயக்கம் காட்டவில்லை என்றும் கூறினார்.

ஜி.எஸ்.டி. அமலாக்கம் நாட்டில் புதிய கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது என்று தெரிவித்தார். இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும், நமது அமைப்பு முறையில் ஊருவியுள்ள கேடுகளில் இருந்து விடுபட முடியும் என்பதில் இந்திய மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

இந்தியா - மியான்மர் உறவுகளில் மக்களுக்கு இடையிலான உறவுகள் தான் பலமாக உள்ளன என்று பிரதமர் கூறினார்.

யாங்கூன் மாகாணத்தின் முதல்வர் திரு. பியோ மின் தெய்ன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.


(Release ID: 1502424)
Read this release in: English