குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசுத் துணைத்தலைவரின் இரமலான் வாழ்த்துகள்
Posted On:
25 JUN 2017 2:09PM by PIB Chennai
மகிழ்ச்சியான இந்த இரமலான் திருநாளில் குடியரசுத் துணைத்தலைவர் திரு எம். ஹமீது அன்சாரி நம் நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் தனது செய்தியில், ஈத்-உல்-ஃபிதிர், புனித மாதமான இரமலானின் நிறைவைக் குறிப்பது; பாரம்பரியமாய்த் தொடரும், மனிதர்களுக்கிடையிலான சகோதரத்துவம் மற்றும் மன இணக்கத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் நாள் இது என்று கூறியுள்ளார். மேலும் அவர், இந்த விழா, நம் வாழ்க்கையில் கருணை, ஈகை, மற்றும் பெருந்தன்மை உணர்வுகளின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.
குடியரசு துணைத்தலைவரின் செய்தி:
”நமது நாட்டு மக்களுக்கும் இந்த மகிழ்ச்சி நிரம்பிய இரமலான் நாளில் என் இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.”
”ஈத்-உல்-ஃபிதிர், புனித மாதமான இரமலானின் நிறைவைக் குறிப்பது; பாரம்பரியமாய்த் தொடரும், மனிதர்களுக்கிடையிலான சகோதரத்துவம் மற்றும் மன இணக்கத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் நாள் இது. இந்த விழா, நம் வாழ்க்கையில் கருணை, ஈகை, மற்றும் பெருந்தன்மை உணர்வுகளின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துகிறது.”
”இரமலான் கொண்டாட்டத்துடன் இணைந்துள்ள புனித நோக்கங்கள், நமது வாழ்க்கையை அமைதி, நல்லிணக்கம் மற்றும் மானுட உணர்வால் மேலும் செழிப்புறச் செய்யட்டும்!”
(Release ID: 1502104)
Visitor Counter : 110