சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

பருவநிலை மாற்றங்களைச் சமாளிப்பதில் புலிகளைக் கொண்டுள்ள காடுகள் சிரமங்களைக் குறைக்கின்றன. டாக்டர் ஹர்ஷவர்த்தன்:

சுற்றுச் சூழல்துறை அமைச்சர் உலகப் புலிகள் தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பு புலிகள் பாதுகாப்பை அதிகரிக்கவும் புலிகள் சரணாலயக்காடுகளில் தணிக்கை செய்யவும் சடங்கு-மரியாதை முறை விதிகள் வெளியீடு:

Posted On: 29 JUL 2017 7:54PM by PIB Chennai

புலிகள் வாழ் காடுகள் சூழல்சார் பணிப்பயன்களை அளிப்பதுடன் பணிபருவநிலை மாற்றங்களை எதிர்த்துப்போராடிச் சமாளிப்பதில்  நமது சிரமங்களைக் குறைக்கும் வகையில் பங்காற்றுகின்றன என்று மத்திய சுற்றுச் சூழல், காடுகள் மற்றும் பருவநிலை மாற்றத்துறை   அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்த்தன் தெரிவித்தார்.

 

புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற உலகப் புலிகள் தின கொண்டாட்டத்தில் பங்கேற்றுப்பேசிய அமைச்சர் ஹர்ஷவர்த்தன், புலி ஓர் ஆராக்கியமான சூழலின்; அடையாளமாகத் திகழ்கிறது என்று கூறினார். புலிகளுக்கான ஆபத்து எப்போதும் தொடர்ந்து கொண்டிருப்பதால் பாதுகாப்பு முயற்சிகளில் எப்போதும் தொய்வு ஏற்படாது என்றார் அவர்.

 

புலிகள் பாதுகாப்பாளர்கள், தொண்டு நிறுவனங்கள், மாணவர்கள் அடங்கிய மிகப்பெரிய கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் கி.பி. 2022இல் புலிகள் எண்ணிக்கையை இரண்டு மடங்காக்க வேண்டும் என்னும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பிரகடன இலக்கானது, ஒரு நியாயமான இலக்குதான் என்றார். ஆனால் இந்த இலக்கை அடைவதற்குக் கூட நாடுகள் திரும்பத் திரும்ப நினைவுட்டப்பட வேண்டியுள்ளன என்றார். அவர் மேலும் கூறுகையில் புலிகள் பாதுகாப்பு என்பது ஒவ்வொரு கணத்திலும் மேற்கொள்ளவேண்டிய ஒன்று என்றும், வெறுமனே ஏதோ ஒரு நாள் நிகழ்ச்சியாக மட்டும் இது இருந்துவிடக் கூடாது என்றும் சொன்னார்.

 

இந்த விழாவில் கலந்துகொண்ட குழந்தைகளிடையே பேசிய அமைச்சர், குழந்தைகள் தினந்தோறும் ஒரு சிறிய நற்செயலைச் செயவதன் மூலம் மற்றவர்களும் நல்ல, சூழல்-நட்பு சார்ந்த செயல்களைச் செய்யத் தூண்டி,

-      சுற்றுச்சூழலைப்பாதுகாக்க

-      புலிகளைப்பாதுகாக்க

-              உடன் வாழும் மனிதர்களுக்காக ஒவ்வொருவரும் வாழவும் பணியாற்றவும் உதவிட, நல்ல செயல்களில் நேர்மையோடும் பொறுப்போடும் ஈடுபட்டு, தமது இதயத்தையும் ஆன்மாவையும் செலுத்தவேண்டும் என்றார்;

ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஒரு சூழல்-நட்புச் செயலை மேற்கொண்டால் நமக்கு நாட்டில் 125 கோடி நல்ல, சூழல் நட்பார்ந்த செயல்கள் கிடைக்கும்என்று கூறிய அமைச்சர் ஹர்ஷவர்த்தன், அப்படி நடக்கின்ற நாள்தான் இந்தியா தனது பழைய உலகத்தலைமை எனும் நிலையை மீண்டும் அடையும் நாளாகும் என்றார்.

 

எந்தத் தகவலையும் சமூகத்தில் சிறப்பாகவும்  பயனுள்ள வகையிலும் பரப்புவதில் குழந்தைகளை விடச் சிறந்தவர்கள் இருக்க முடியாது என்று அமைச்சர் கூறினார். குழந்தைகளிடம் ஒழுக்கத்தையும் ஒழுங்கையும் குறிப்பாக ஆசிரியர்களால் ஊட்டப்பட வேண்டியது அவசியம் என்று கூறிய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் அவர்கள் எவ்வகையிலும் புறக்கணிக்கப்பட்டுவிடக் கூடாது என்றார்.

 

புலிகள் பாதுகாப்பை அதிகரிக்கவும் புலிகள் சரணாலயக் காடுகளில் தணிக்கை செய்யவும் சடங்கு-மரியாதை பற்றிய விதிமுறைகளை அமைச்சர் வெளியிட்டார்பாராளுமன்ற கேள்விகள் அடிப்படையில் புலிகள் பாதுகாப்பு பற்றிய ஒரு கண்ணோட்டம் எனும் குறுந்தகடு ஒன்றையும் அமைச்சர் வெளியிட்டார்.

 

புலிகள் பாதுகாப்புக்கு உத்தரவாதமுள்ள தர அங்கீகார் விருதினை உத்தர காண்ட்  மாநில லேன்ஸ்டவுண் வனப்பகுதிக்கு அமைச்சர் வழங்கினார். புலிகளைப் பாதுகாப்பதில் பயன்மிகு வழிகளில் நிர்வாகத்தரத்தினைக் கையாண்ட மைக்காக இவ்விருது வழங்கப்பட்டது.

 

புலிகள் பாதுகாப்புக்கு உத்தரவாதமுள்ள தர அங்கீகாரம் என்பது  புலிகள் உள்ள நாடுகளின் புலிகள் பாதுகாப்பு முகமைகளின் ஏற்பாட்டால் உருவாக்கப்பட்டதாகும்இது புலிகள் பாதுகாப்பில் எந்த ஒரு நிறுவனமும் பங்கேற்கும் ஒரு தன்னார்வத் திட்டமாகும். புலிகள் வாழும் பகுதிகளில் முறையான நிர்வாகத்தை மேற்கொள்ள சில குறைந்தபட்ச தர அளவுகள்தகுதிகளுடன்  17 அம்சங்களை உள்ளடக்கியதாகும்.

புலிகள் ஆர்வலரான நடிகர் ரந்தீப் ஹூடா பேசுகையில் புலி, இந்தியப் பாரம்பரியத்தின் சின்னம் என்றார். இது தொடர்பாக மக்கள் அனைவரும் மாற்றத்தின் முகவர்களாக மாற வேண்டும் என்று வற்புறுத்தினார்.

விழாவில் புலிகள் பற்றிய வானொலி விளம்பர நிகழ்ச்சி ஒன்றும் சுற்றுச்சூழல் அமைச்சரால் வெளியிடப்பட்டது.

 

செயல்பாட்டில் உள்ள புலிகள் திட்டத்தின் கீழ் எடுக்கப்படும்  பாதுகாப்பு முயற்சிகளால் உலகில் உள்ள 13 நாடுகளில் உள்ள புலிகள் மண்டலங்களில்  இந்தியாவில் தற்போது அதிகபட்ச புலிவாழிடங்களும் அதிகப் புலிகளும் உள்ளன. 2022 வாக்கில் புலிகள் மேம்பாடு  பற்றிய செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பிரகடனத்தின்படிபுலிகள் பாதுகாப்பில் தனது பெரும் பங்களிப்பைத்தந்து இந்தியா தொடர்ந்து பீடுநடை போட்டு வருகிறது.

 

உலகப்புலிகள் தினம் மிகஉற்சாகத்துடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் ஆர்வத்துடன் பங்கேற்ற குழந்தைகள் நடத்திய புலிகள் பாதுகாப்பு பற்றிய இரண்டு தெருக்கூத்து நாடகங்களும் இடம்பெற்றன. மேலும் உத்தரப் பிரதேச இந்திய வனப் பணி  அலுவலர் திரு. சுஜய் பானர்ஜியும், புகழ்பெற்ற பாடகர் திரு. ஆபிஷேக் ராயும் பாடிய புலிகள் பாதுகாப்பு பற்றிய இரண்டு பாடல்களும் பாடப்பட்டன. இரண்டு தெரு நாடகங்களையும் இரு பாடல்களையும் கண்டுகளித்த 1000க்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மிகவும் உற்சாகமாக வரவேற்றுக் களித்தனர்.

 

அஸ்ஸாம்   மாநில வனத்துறை அமைச்சர்  திருமதி பிரமிளா ராணிபிரம்மா, டிஷா  மாநில வனத்துறை அமைச்சர் திரு. விஜயஸ்ரீரௌத்ராய்,    சத்தீஷஷ்கர் மாநில வனத்துறை அமைச்சர் திரு மகேஷ் கஹ்டா, உத்தரகாண்ட் மாநில வனத்துறை அமைச்சர் திரு ஹரக்சிங் ராவத், மத்தியப்பிரதேச மாநில வனத்துறை அமைச்சர் திரு கௌரி சங்கர் ஷெஜ்வார் மற்றும் மத்திய சுற்றுச் சூழல், காடுகள் மற்றும் பருவநிலை மாற்றத்துறை   அமைச்சக மூத்த அலுவலர்கள், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள்உலகப் புலிகள் அமைப்பு இயக்கத்தினர், பிரதிநிதிகள் இவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

 

புலிகள் பாதுகாப்புக்காக நாடாளுமன்ற கேள்விகளுக்கேற்ப எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

 

நாடாளுமன்ற கேள்வி-பதில்கள் அடிப்படையில் இந்தியாவில் புலிகளின் பாதுகாப்புக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய கண்ணோட்டம்”  எனும் தொகுப்பேடு பாராளுமன்றத்தில் மக்கள் அவையிலும் மாநிலங்கள் அவையிலும் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்களும் கொள்கைகளை உருவாக்குபவர்களும் விவாதித்த குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் தகவல்களைக் கொண்டுள்ளன.

 

இந்தியாவில் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அவற்றைப் பாதுகாக்கத் தேவையான விவரங்கள் அடங்கிய குறுந்தகடுகள்(சி.டி) தொகுப்பு தயாராக உள்ளது. இது அறிவியலாளர்கள், கொள்கை உருவாக்குபவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மற்றும் சூழல் பாதுகாப்பு மற்றும் நீடித்த வளர்;ச்சி தொடர்பான அனைவருக்கும் உதவிபுரிவதாக இருக்கும்.

 

வன உயிர்கள் நிர்வாகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பற்றியும், அவற்றிற்கான தீர்வுகள் பற்றியும் 5 ஆண்டுகளுக்கு புலிகளைப் பாதுகாப்பது பற்றியும் பாராளுமன்ற இரு அவைகளிலும் எழுப்பப்பட்ட கேள்விகள் மற்றும் அவைகளுக்கான விடைகள் போன்றவற்றை இந்த அறிக்கை விளக்குகிறது.

 

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தால் புலிகளைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் சட்டப்படியான, நிர்வாக ரீதியிலான, நிதியாதாரத்துடன், பன்னாட்டு ஒத்துழைப்போடு மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் மூலமும், தரம் சார்ந்த செயல்பாட்டு முறைகள் மூலமும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

 

 



(Release ID: 1502068) Visitor Counter : 159


Read this release in: English