நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

பிரபல நபர்கள் வழங்கும் அங்கீகாரம்

Posted On: 01 AUG 2017 4:40PM by PIB Chennai

2015ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு மசோதாவை ஆராய்ந்த உணவு, நுகர்வோர் நலன் மற்றும் பொது விநியோக துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தவறான பொருள் தரும் விளம்பரங்களை அங்கீகரிப்பவர்களுக்கு எதிராக தண்டனை அளவுகளை பரிந்துரை செய்திருக்கிறது. இதன்படி முதல் முறை தவறு இழைப்பவர்களுக்கு ரூ. 10 லட்சம் அபராதமோ அல்லது  இரண்டாண்டு கால சிறை தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும். இரண்டாம் முறை தவறு இழைப்பவர்களுக்கு ரூ. 50 லட்சம் அபராதமும் 5 ஆண்டு கால சிறை தண்டனையும் விதிக்கப்படும். இந்த பரிந்துரைகளை அரசு பரிசீலித்து வருகிறது.

     2011ஆம் ஆண்டு சிப்பம் கட்டப்பட்ட பொருட்கள் சட்ட அளவை விதிகளின்படி, மத்திய அரசு சில்லறை விற்பனை விலை மாற்றத்தை அறிவிப்பது குறித்து, கீழ் கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது. 2017 ஜுலை முதல் தேதிக்கு முன்னதாக நிலுவையில் விற்பனையாகாமல் இருப்பில் உள்ள உற்பத்தி செய்யப்பட்ட/சிப்பம் கட்டப்பட்ட/இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் சில்லறை விற்பனை விலையை உற்பத்தியாளர்கள் அல்லது சிப்பம் கட்டுபவர்கள் அல்லது இறக்குமதியாளர் ஜி.எஸ்.டி. வரி அமலாக்கம் காரணமாக ஏற்பட்ட விலை உயர்வை இணைத்து முன்று மாத காலத்துக்கு அதாவது 2017 ஜுலை 1 முதல் 2017 செப்டம்பர் 30 வரை அச்சடிப்பது மூலமாகவோ அல்லது ஸ்டிக்கர் மூலமாகவோ அல்லது ஆன்லைன் பிரிண்டிங் மூலமாகவோ மாற்றி அமைத்துக் கொள்ளலாம். மேலும் எம்.ஆர்.பி. யை குறைப்பதற்கு அனைத்து வரிகளையும் உள்ளடக்கிய புதிய குறைக்கப்பட்ட விலையை ஸ்டிக்கர் ஒட்டுவதன் மூலம் அறிவிக்கலாம். அதே சமயம் உற்பத்தியாளர் அல்லது சிப்பம் கட்டுபவர் அல்லது இறக்குமதியாளர் சிப்பத்தின் லேபிலில் அளித்துள்ள எம்.ஆர்.பி. பிரகடனத்திற்கு இது பொருந்தாது.

     இந்த சட்ட விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை பற்றி 2009 சட்ட அளவைகள் சட்டம், 2011 சிப்பம் கட்டப்பட்ட சட்ட அளவைகள் விதிகள் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன.

     ஜி.எஸ்.டி தொடர்பான கேள்விகள், புகார்கள் கையாள்வதற்கு மத்திய வருவாய் துறை, இலவச தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது. நுகர்வோர்நலத் துறையை பொறுத்த வரை ஜி.எஸ்.டி தொடர்பான கேள்விகள், புகார்கள் கையாள்வதற்கு தேசிய நுகர்வோர் உதவித் தொலைபேசி எண் பயன்படும்.

     இந்த தகவலை மத்திய நுகர்வோர்நலன், உணவு, பொது விநியோகம் துறை இணை அமைச்சர் திரு. சௌத்ரி தெரிவித்தார்.

****

 


(Release ID: 1502043) Visitor Counter : 108


Read this release in: English