குடியரசுத் தலைவர் செயலகம்

‘குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஓர் அரசியல் மேதை’ நலின் முதற்படியைப் பெற்றுக் கொண்டார்.

Posted On: 02 JUL 2017 8:54PM by PIB Chennai

இன்று (2 ஜூலை 2017) ராஷ்டிரபதி பவனில் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் வெளியிட்டகுடியரசுத் தலைர் பிரணாப் முகர்ஜி ஓர் அரசியல் மேதைஎன்னும் நூலின் முதற்பிரதியை குடியரசுத் தலைவர் திரு.பிரணாப் முகர்ஜி பெற்றுக்கொண்டார்.

     இந்த விழாவில் பேசிய குடியரசுத் தலைவர் 13வது குடியரசுத் தலைவர் பதவிக் காலம் பற்றிய புகைப்படக் கட்டுரையை வெளியிட்டதற்காகதி ஸ்டேட்ஸ் மேன்நாளிதழுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். புகைப்படக் கட்டுரை வெளியிடுவது குறித்துதி ஸ்டேட்ஸ் மேன்நாளிதழ் தெரிவித்தபோது தாம் முதலில் விருப்பமில்லாமல் இருந்ததாக அவர் ஒப்புக்கொண்டார். குடியரசு தலைவரின் எல்லா நிகழ்ச்சிகளும் பொதுவான  தளத்தில் வெளிப்பட நடந்ததால் புகைப்படக் கட்டுரை என்ன பயன் தரும் என்று சந்தேகம் கொண்டதாகத் தெரிவித்தார்.

     பின்னர் திரு.இரவீந்திரகுமார் மற்றும் திரு.ஆர்.பி.குப்தாதி ஸ்டேட்ஸ் மேன்இதழாளர்களை வருங்காலத் தலைமுறைக்கு முக்கிய நிகழ்வுகளை  ஆவணப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியதால் தாம் மனநிறைவடைந்ததாகத் தெரிவித்தார். குடியரசுத் தலைவர் பற்றிய செய்தி அடுத்த தலைப்புச் செய்தி வரும் வரை தான் கவனத்தில் நிற்கிறது. மேலும் அவர் ஒரு வங்காளி என்ற முறையில் தாம் வளரும் காலத்தில் உடன் நின்று விளங்கிய செய்தித்தாளானதி ஸ்டேட்ஸ் மேன்னிடமிருந்து”  வேண்டுகோள் வந்ததால் ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்தார். ஸ்டேட்ஸ் மேன் செய்தித்தாளுடன் மிக நீண்ட காலத் தொடர்பு இருந்தது என்றும் கருத்து வேறுபாடுகளை ஏற்றுமதிக்க இருவரும் ஒத்துக் கொண்டதாகவும் கூறினார்.

     கலை மற்றும் படைப்புத் திறமைகள் காலம் மற்றும் நில எல்லைகளைக் கடந்தவை என்று கூறினார் குடியரசுத்தலைவர். அவற்றின் கவர்ச்சி உலகளாவியது.

     இந்தப்  படக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள, திருவருள் ஜோஷி எடுத்தப் படங்களை அவர் பாராட்டினார். விழாவில் கலந்து கொண்டு நூலை வெளியிட்ட பிரதமர் திரு.நரேந்திர மோடிக்குத் தாம் நன்றியையும் ஆழ்ந்த போற்றுதலையும் தெரிவித்தார்.

     வரலாற்றுக் கண்ணோட்டத்தில் இந்தப் படக்கட்டுரை முக்கியமானது என்று பிரதமர் திரு.நரேந்திரமோடி தெரிவித்தார். இந்தப் படங்கள் வரலாற்றை நிலைத்திருக்கச் செய்கின்றன என்றும், அனைவருக்கும் ஊக்கச் சக்தியாக மனிதாபிமானப் பக்கத்தை அவை காட்டுகின்றன என்றும் கூறினார்.

     “குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ஓர் அரசியல் மேதை”  என்னும் இந்த நூல் இந்தியாவின் மிகப் பழமையான நாளிதழ்களில் ஒன்றான ஸ்டேட்ஸ்மேன்னால் வெளியிடல் பெற்றுள்ளது. இந்த நூல் 13வது குடியரசுத் தலைவரின் முழுமையான படப்பதிவாக விளங்குகிறது.

     மனிதாபிமானம் மிக்க முதல் குடிமகனை, சிந்தனை மிகு தலைவர், கலை மற்றும் கல்வி நிறுவனங்களின் புரவலர் மற்றும் ஆயுதப்படைகளின் உச்சநிலைத் தளபதி என்னும் பலநிலைகளில் அவரது சாதனைகளை ஆவணப்படுத்துகிறது.



(Release ID: 1501939) Visitor Counter : 72


Read this release in: English