பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

ஜாரவா பழங்குடியினர் குறித்த விடியோக்களை யூ-ட்யூபில் பதிவேற்றம் செய்தவர்கள் மீது,தேசிய அட்டவணைப் பழங்குடியின கமிஷன் நடவடிக்கை

Posted On: 07 JUL 2017 5:57PM by PIB Chennai

அந்தமான் தீவுகளின் பாதுகாக்கப்பட்ட ஜாரவா மற்றும் பழங்குடி இனத்தவர்கள் குறித்த ஆட்சேபனைக்குரிய படங்கள் மற்றும் விடியோக்களை சமூக வலைத்தளமான    யூ-ட்யூபில் பதிவேற்றம் செய்தவர்கள் மீதான நடவடிக்கையை தேசிய அட்டவணைப் பழங்குடியின கமிஷன் தானாகவேத் துவங்கியுள்ளது.

கமிஷன் இந்தப் பிரச்சனையை  உள்துறை, வெளியுறவுத் துறை, செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை, பழங்குடியின நலத்துறை அமைச்சகங்கள் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளின் முதன்மைச் செயலரிடம் எடுத்துச் செல்லவும், ஆட்சேபனைக்குரிய அந்த வடியோப் படங்களை யூ-ட்யூபிலிருந்து உடனாடியாக நீக்கவும், இந்த வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தவர்கள் மீதான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவும் முடிவு செய்திருக்கிறது.

அந்தமான் நிகோபார் தீவுகள் (அபாரிஜின் பழங்குடியின பாதுகாப்பு) ஒழுங்குமுறை சட்டம் 1956 (PAT)ல் இருக்கும் விதிகளின் படி, அந்தமானியர்கள், ஜாரவாக்கள், ஓங்கிஸ், செண்டினெலீஸ், நிகோபார் மற்றும் ஷாம் பென் இனத்தவர்கள் “அபாரிஜின் பழங்குடிகளாக” அடையாளப் படுத்தப்பட்டுள்ளனர். இந்த இனத்தவர்களுக்கு வெளியுலகத் தலையீடற்றப் பாதுகாப்பை வழங்கும் விதிகளை PAT கொண்டுள்ளது.  இந்தப் பழங்குடியினர் பற்றிய விளம்பரம் மூலம் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எதிரான தண்டனை விதிகள், 2012ஆம் ஆண்டில் அதில் சேர்க்கப்பட்டன. பிரிவு 7ன் கீழுள்ள அறிவுறுத்தல்களுக்கு (இந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதியில் நுழைவதை இப்பிரிவு தடை செய்கிறது) முரணாக இந்தப் பகுதிகளில் நுழைந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுப்போர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். அட்டவணை இனத்தவர் மற்றும் பழங்குடியினத்தவர் (வன்கொடுமைப் பாதுகாப்புச் சட்டம்) பிரிவு 3(i) (r) யும் இவ்விதி மீறல்  ஈர்க்கிறது.

அந்தமான் நிகோபார் தவுகளின் மொத்த மக்கள் தொகை ஏறத்தாழ 28077. இதில் ஐந்து பழங்குடியினத்தவரின் மொத்த எண்ணிக்கை 500க்கு குறைவாகவே இருக்கும்.



 



(Release ID: 1501937) Visitor Counter : 76


Read this release in: English