குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

நாட்டின் முதல் குடிமகள் என்ற பதவிக்கு பெருமையும் கண்ணியமும் சேர்த்தவர் திருமதி சுவ்ரா முகர்ஜி – குடியரசு துணைத் தலைவர் பாராட்டு!

‘குடியரசுத்தலைவரின் சீமாட்டி – புத்தக வெளியீட்டு விழா

Posted On: 13 JUL 2017 6:54PM by PIB Chennai

செல்வி சங்கீதா கோஷ் எழுதிய, ‘பிரசிடென்ட்ஸ் லேடிஎன்ற புத்தகத்தின் முதல் பிரதியை, குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜிடம் குடியரசுத் துணைத்தலைவர் திரு.எம்.ஹமீத் அன்சாரி ஒப்படைத்தார்.

அதன்பிறகு கூட்டத்தினரிடையே உரையாற்றிய குடியரசுத் துணைத்தலைவர், ‘’நாட்டின் முதல் குடிமகள் என்ற பதவிக்கு திருமதி சுவ்ரா முகர்ஜி பெருமையும் கண்ணியமும் சேர்த்தவர்’’ என்று குறிப்பிட்டார்.

திருமதி. முகர்ஜி இசை ஆர்வலராக, ஓவியராக, எழுத்தாளராக, ஆசிரியராக, அன்னையாக, நாட்டின் மிக உயர்ந்த பதவி வகித்தவரின் ஆத்மார்ந்த துணையாக இருந்தார் என குடியரசு துணைத்தலைவர் குறிப்பிட்டார். மேலும் அவர் பேசுகையில், ‘’இந்தப் புத்தகம் திருமதி. முகர்ஜியின் சிறப்பான தனித்தன்மை, மனிதநேயம் போன்றவற்றை சிறப்புற வெளிப்படுத்துகிறது’’ என தெரிவித்தார். ‘’இந்தப் புத்தகம் திறமையும், தகுதியும் வாய்ந்த நபருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும்’’ குறிப்பிட்டார்.

துணைக் குடியரசுத் தலைவர் வெளியிட்ட அறிக்கை இது

‘’திருமதி.முகர்ஜி நாட்டின் முதல் குடிமகள் என்ற பதவிக்கு பெருமையும் கண்ணியமும் சேர்த்தவர் என்பதுடன் குடியரசுத் தலைவருக்கு பொருத்தமான துணையாகவும் திகழ்ந்தார். இசை ஆர்வலராக, ஓவியராக, எழுத்தாளராக, ஆசிரியராக, அன்னையாக மற்றும் நாட்டின் மிக உயர்ந்த பதவி வகித்தவரின் ஆத்மார்ந்த துணையாகவும் இருந்தார். நமது குடியரசுத் தலைவரின் திருமண நாளன்று, இந்தப் புத்தகம் வெளியிடப்படுவது நல்ல பொருத்தமாக அமைந்துள்ளது.

திருமதி. முகர்ஜி, தற்போது வங்காளதேசத்தில் அமைந்துள்ள ஜெஸ்ஸோரில் பிறந்தார். பிரிவினை நிகழ்ந்தபோது லட்சக்கணக்கான மக்கள் சமுதாய, கலாச்சார நிலங்களைத் துறந்து பயணப்பட்ட சங்கடத்தை எதிர்கொண்டவர்.  கொல்கத்தாவில் புதிய வாழ்க்கையைத் தொடங்கியவர், படிப்பில் முழு கவனம் செலுத்தி, வரலாறு மற்றும் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார்.

நாட்டின் முதல் குடிமகளானதும், குடியரசுத் தலைவர் மாளிகைக்கு இசையை மகிழ்வுடன் கொண்டுவந்தார். வங்காள இசை மேதை டி.எல்.ராய் அவருக்கு அன்பளிப்பாக வழங்கிய ஆர்மோனியம், தம்பூரா போன்ற இசைக் கருவிகள் அவருடன் மாளிகையில் வசித்தன.

திருமதி.முகர்ஜி சிறந்த பாடகி ஆவார். ரவீந்தரநாத் தாகூரின் பாடல்களை பாடல், நடனம் மற்றும் நாடக வடிவத்தில் ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்க நாடுகளில் நடத்தியிருக்கிறார். ரவீந்திரநாத் தாகூரின் தத்துவங்களை பாடல் மற்றும் நடன வடிவத்தில் நிகழ்த்தும், கீதாஞ்சலி என்ற குழு உருவாக இவர்தான் முழு காரணமாக இருந்தார். இவர் 2013-ம் ஆண்டு ரவீந்தரநாத் தாகூர் பிறந்த தின விழாவில், நாட்டின் முதல் குடிமகள் என்ற நெறிமுறைகளை புறம் தள்ளிவிட்டு, தனது குழுவினருடன் அமர்ந்து, தனக்குப் பிடித்த தாகூரின் பாடல்கள் பாடியதை இந்தப் புத்தகம் நினைவூட்டுகிறது

இவர் இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். முன்னாள் பிரதம மந்திரி திருமதி.இந்திரா காந்தியுடன் அவர் தனிப்பட்ட முறையில் உரையாடிய நேர்காணலை, ‘சோக்கர் அலோய்என்ற பெயரில் முதல் புத்தகமாக எழுதினார்.  சீனாவுக்கு மேற்கொண்ட பயணம் குறித்து, ‘சேனா ஆசெனாய் சின்என்ற பெயரில் இரண்டாவது புத்தகம் எழுதியுள்ளார்.

திருமதி.முகர்ஜி, மிகச்சிறந்த ஓவியராக பல்வேறு ஓவியக் கண்காட்சிகளில் பங்கெடுத்துள்ளார். அவரது ஓவியக் கலைக்கு தூண்டுகோலாக இருந்தவர் அவரது தாய், அவர் பிரபல ஓவியராக புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலம் மற்றும் வங்காளம் என இரண்டு மொழியில் வெளியாகி இருக்கும் இந்தப் புத்தகத்தில் திருமதி.முகர்ஜி குறித்து முன்னாள் பிரதம மந்திரி டாக்டர் மன்மோகன் சிங், திருமதி குருசரண் கவுர், திருமதி ஷீலா தீக்ஷித் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நினைவுத் தொகுப்புகளும் இடம் பெற்றுள்ளன.

இந்தப் புத்தகம் திருமதி. முகர்ஜியின் சிறப்பான தனித்தன்மை, மனிதநேயம், அன்பு நெறி போன்றவற்றை சிறப்புற வெளிப்படுத்துகிறது இந்தப் புத்தகம் தகுதியும் திறமையும் வாய்ந்த ஒருவருக்கு பொருத்தமான அஞ்சலியாக திகழ்கிறது.

இந்தப் புத்தகத்தை சிறப்புற எழுதிய ஆசிரியர் சங்கீதா கோஷ் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஷாயிரி கோஷ் ஆகியோருக்கு என் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.

ஜெய்ஹிந்த்.’’


(Release ID: 1501900) Visitor Counter : 132


Read this release in: English