நிதி அமைச்சகம்

தேசிய ஓய்வூதிய முறையில் (என் பி எஸ்) பயனடையும் சந்தாதாரர்களும் அதனைச் செயல்படுத்தும் அலுவலகங்களும் எளிதாகக் கையாளும் வகையில் புதிய செயல்பாட்டு முறைகள் வெளியிடப் பட்டுள்ளன.

இடுகை இடப்பட்ட நாள்: 01 JUL 2017 5:48PM by PIB Chennai

தேசிய ஓய்வூதிய முறையில் (என் பி எஸ்) நடைமுறையில் விஷயங்களை மேம்படுத்தவும் எளிமையாக்கவும் அவ்வப்போது பல்வேறு முன்முயற்சிகளை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பி எஃப் ஆர் டி ஏ) மேற்கொண்டுவருகிறது. அவை (என் பி எஸ் கட்டமைப்பின் கீழ் புதிய செயல்பாட்டு மேம்பாடு, கணக்குத் துவங்குவதையும் பணம் பெறுவதையும் எளிமையாக்குதல், குறைதீர் நிர்வாகம் போன்றவை இது தொடர்பாக, பயனடையும் சந்தாதாரர்கள் மற்றும் செயற்படுத்தும் அலுவலகங்கள் நடைமுறையை எளிதாக்கும் வகையில் மத்திய பதிவேடுகாப்பாக (சி ஆர் ஏ) அண்மையில் இது தொடர்பான புதிய செயல்பாட்டு நடவடிக்கைகளை வெளியிட்டது. இவைகுறித்து கீழே விவரம் தரப்பட்டுள்ளது.

என் பி எஸ் சந்தாதாரர்களுக்கான செயல்பாட்டு நடவடிக்கைகள்:

. எண.

செயல்பாட்டு முறைகள்

சுருக்கமான விவரம்

1

வெளிநாட்டுக் கணக்கு வரிக்கான இணக்கச்சட்டப்படியான (எஃப் ஏ டி சி ஏ) அறிவிப்பை இணையவழி சமர்ப்பித்தல்

எஃப் ஏ டி சி ஏ படியான இணக்கத்தை விரைந்து செயல்படுத்த வசதியாக சந்தாதாரர்கள் தங்களின் தன்னறிவிப்பை சி ஆர் ஏ இணையவழி (www.cra.rsdl.com) சமர்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல் சி ஆர் ஏ இணையதளத்திலும் கிடைக்கும். எஃப் ஏ டி ஏ படி தன்னறிவிப்பை இணையவழி சமர்ப்பிக்க சந்தாதாரர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளும் கூட இந்த இணைய தளத்தில் கிடைக்கும்.

2

சி ஆர் ஏ – க்கள் இடையேயான செயல்பாட்டு ஒருங்கிணைப்பு

என் பி எஸ்-ன் கீழ் இரண்டாவது சி ஆர் ஏ-வாக கார்வி கம்யூட்டர் ஷேர் பிரைவேட் லிமிட்டெட் (கே சி ஆர் ஏ) நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சந்தாதாரர்களும் செயல்படுத்தும் அலுவலகங்களும் தங்கள் விருப்பத்திற்கேற்ப இந்த இரண்டு சி ஆர் ஏக் களில் ஒன்றில் நிரந்தர ஒய்வூதியக் கணக்கைத் திறந்து கொள்ளலாம். சந்தாதாரர் தாம் விரும்பும் சி ஆர் ஏ – ஐத் தெரிவு செய்யலாம். சி ஆர் ஏ-க்கள் இருக்கும் பகுதிக்குள் சந்தாதாரர் குடி பெயர்ந்து சென்றால் (கார்வி சி ஆர் ஏ விலிருந்து என் எஸ் டி எல் - சி ஆர் ஏ வுக்கும் என் எஸ் டி எல் - சி ஆர் ஏ விலிருந்து கார்வி - சி ஆர் ஏ வுக்கும்) சி ஆர் ஏ க்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டு முறை உருவாக்கப்பட்டுள்ளது. இடமாற்ற வேண்டுகோளைப் பரிசீலிக்க, சந்தாதாரர் அருகில் உள்ள சி ஆர் ஏ – வை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அருகிலுள்ள சி ஆர் ஏ என் பி எஸ்-ன் இடமாற்ற வேண்டுகோளைப் பரிசீலித்து செயல்படுத்தும். சி ஆர் ஏ க்கள் இடையேயான மாறுதல் வேண்டுகோள் நாட்டில் ஒரு முறை மட்டுமே அனுமதிக்கப்படும்.

3

இ என் பி எஸ் – ல் புதிய அம்சங்கள்

1. இ என் பி எஸ் அலகில் இந்தி மொழி என் பி எஸ் சந்தாதாரர் வசதிக்காக இ என் பி எஸ் அலகு இருமொழி உடையதாக உருவாக்கப்பட்டுள்ளது. இ என் பி எஸ் மூலமாக பதிவு பங்களிப்பு செய்ய தமது விருப்பம் போல் மொழியைத் (ஆங்கிலம் அல்லது இந்தி) தெரிவு செய்யலாம்.

2. ஆதார் அடிப்படையிலான பதிவுக்கு இகையெழுத்து: ஆதார் மூலமாக பதிவு செய்யும் பட்சத்தில் இ என் பி எஸ் பதிவு முடிந்த 90 நாட்களுக்குள் சந்தாதாரர் எழுத்துப்பூர்வமான விண்ணப்படிவத்தை சமர்ப்பித்தல் கட்டாயமாக இருந்தது. மின்னணு மூலமான பி ஆர் ஏ என் விண்ணப்பத்தில் சந்தாதாரர் கையெழுத்திட வசதியாக இகையெழுத்து வசதி (ஆதார் இ கே ஒய் சி சேவை) இ என் பி எஸ் – சுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. சி ஆர் ஏ க்கு எழுத்து பூர்வமான ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டிய அவசியத்தை இந்த நடைமுறை தவிர்க்கிறது.

3. பணம் செலுத்தும் புதிய வழிதிறப்பு – பில்டெஸ்க்: இ என் பி எஸ்-ல் எஸ்பிஐ இபேயுடன் பில் டெஸ்க் என்ற பணம் செலுத்தும் வழிதிறப்பு சேவை இரண்டாவதாக இணைக்கப்பட்டுள்ளது. பணம் செலுத்தும் சேவை எங்கு கிடைக்கிறது என்பதைத் தெரிவு செய்து சந்தாதாரர் தன் விருப்பம்போல் எந்த சேவைதாரர் மூலமும் பணம் செலுத்த இது உதவும். எஸ் பி ஐ இபேமெண்ட் வழிதிறப்பில் ஒருபகுதியாக இல்லாத புதிய வங்கிகளும் குறிப்பாக ஆக்சிஸ் வங்கி, எச்டிஎஃப் 5 வங்கிகளம் பில்டெஸ்க்குடன் கூடுதலாக புதிய பணம் செலுத்தும் வழிதிறப்பில் பங்கேற்க உறுதியளித்துள்ளன.

4.

என்பிஎஸ் செல்பேசி செயவியில் புதிய அம்சங்கள்

1. இரண்டு அடுக்குப்பணம் பெறுதல்

செல் பேசி செயலியைப் பயன்படுத்தி என்பிஎஸ் – ன் கீழ் இரண்டுக்குப் பணம் பெற சந்தாதாரர் இப்போது முயற்சி செய்யலாம். பயன்படுத்துவோர் ஐடி மற்றும் கடவுச் சொல்லைக் (பாஸ்வோர்ட்) கொண்டு சந்தாதாரர் செயலிக்குள் செல்லலாம். செல்பேசி செயலியில் ஒரு தடவைக் கான கடவுச் சொல்லை (ஓ டி பி) உருவாக்கி, இரண்டடுக்குப் பணம் பெறுதலைத் தெரிவு செய்யலாம். சரியான ஓ டி பி-யை உள்ளிட்டு (i) மொத்தமான தொகை அல்லது (ii) திட்ட ரீதியான அலகுகள் என பணம்பெறும் முறையை சந்தாதாரர் தெரிவு செய்யும் அம்சம் உள்ளது. விருப்பம் தெரிவு செய்யப்பட்டு தேவையான விவரங்கள் சந்தாதாரரால் அளிக்கப்பட்டுவிட்டால் இது சி ஆர் ஏ முறையில் நிறைவேற்றப்படும். இதையடுத்து சிஆர்ஏ யுடன் பதிவு செய்யப்பட்டுள்ள சந்தாதாரரின் வங்கிக் கணக்குக்கு நிதி பரிமாற்றம் செய்யப்படும்.

 

2. ஆதாரைப் பதிவிடுதல்

செல்பேசி செயலியைப் பயன்படுத்தி சந்தாதாரர் தனது யூசர் ஐடி மற்றும் கடவுச் சொல்லைக் கொண்டு செயலிக்குள் சென்று ‘ஆதார் எண்ணினை சேர்/தற்காலப்படுத்து’ என்பதைத் தெரிவு செய்யலாம். இந்தத் தேர்வால் சந்தாதாரர் தனது ஆதாரைப் பெற முடியும். ஆதாருக்குள் நுழையும் பட்சத்தில் என்பிஎஸ்-இன் கீழ் பதிவு செய்யப் பட்ட சந்தாதாரரின் யுஐடிஏஐ தகவல் தளத்தில் உள்ள விவரங்களுடன் அதிகார பூர்வமானதாகிவிடும். அதிகார பூர்வமானதற்குப்பின் யுஐடிஏஐ-யுடன் பதிவுச்செய்யப்பட்ட சந்தாதாரரின் செல்பேசி எண்ணக்கு ஓடிபி அனுப்பப்படும். சந்தாதாரர் சரியான ஓடிபி-யை உள்ளிட்ட நிலையில் பிஆர்ஏ எண்ணுக்கு ஆதார் பதிவாகிவிடும்.

 

3. ஓடிபி-யைப் பயன்படுத்தி கடவுச் சொல்லினை மாற்றம் செய்தல்

ஓடிபி மூலம் செல்பேசி செயலியைப் பயன்படுத்தி சந்தாதாரர் இப்போது தனது கடவுச் சொல்லினை மாற்ற முடியும்.  சந்தாதாரர் தனது ப்ரான், பிறந்த தேதி, ஆகியவற்றை உள்ளிட்டு புதிய கடவுச் சொல்லை செட் செய்து ஓடிபி-யை உருவாக்க வேண்டும். (சிஆர்ஏ-யுடன் பதிவு செய்யப்பட்ட) சந்தாதாரரின் செல்பேசியில் பெறப்பட்ட சரியான ஓடிபி-யை உள்ளிடும் பட்சத்தில் கடவுச் சொல் செயல்பாட்டுக்கு வந்துவிடும். ரகசியக் கேள்வியைப் பயன்படுத்தி கடவுச்சொல்லை மாற்றம் செய்யும் விருப்பத் தெரிவுக்குக் கூடுதல் விருப்பத் தெரிவாகும் இது.

5.

அடல் ஓய்வூதிய திட்டத்தில் (ஏபிஒய்) புதிய அம்சங்கள்

1. இ ப்ரான் அட்டையும் பரிமாற்ற விவரமும்

இ ப்ரான் அட்டை மற்றும் பரிமாற்ற விவரங்களைப் பதிவிறக்கம் செய்யும் அல்லது அச்சிடும் வசதி ஏபிஒய் சந்தாதாரர்களுக்கு கிடைக்கச் செய்யப்பட்டுள்ளது. ஏபிஒய் சந்தாதாரர்கள் தங்களின் இ ப்ரான் அட்டை மற்றும் பரிமாற்றம் விவரங்களை சிஆர்ஏ என்பிஎஸ் லைட் இணையதளத்தில் (www.npslite_nsdl.com) பெறமுடியும் ப்ரான் விவரங்களோடோ / இல்லாமலோ தங்களின் இ ப்ரான் அட்டை மற்றும் பரிமாற்ற விவரத்தைத் தேடும் விருப்பத் தேர்வு இந்த சந்தாதாரருக்குக் கிடைக்கிறது. ப்ரான், வங்கிக் கணக்கு எண் அல்லது சந்தாதாரர் பெயர், வங்கிக் கணக்கு எண் மற்றும் ஏபிஒய்-ன் கீழ் சிஆர்ஏ முறையில் பதிவு செய்த பிறந்த தேதி போன்ற  குறைந்தபட்சத் தகவல்களை சந்தாதாரர் அளிக்க வேண்டும்.

2. குறைதீர்வுக்கு தகவல் தருதல்

சிஆர்ஏ முறையில் குறை தெரிவிக்கப்படும் போது அதற்குத் தீர்வுக்கான ஏபிஒய் சந்தாதாரருக்கு மின்னஞ்சல்/குறுஞ்செய்தி மூலம் (டோக்கன் எண்ணுடன்) அனுப்பப்படுகிறது.

 

செயல்படுத்தும் அலுவலகங்களுக்கான செயல்பாட்டு முறைகள்

. எண.

செயல்பாட்டு முறைகள்

சுருக்கமான விவரம்

1.

டிடி ஓக்களால் இணையவழி சந்தாதாரர் பதிவு

ஓபிஜிஎம்-ஐப் பயன்படுத்தி இணையவழி சந்தாதாரர் பதிவு செய்யும் வசதி அரசுத்துறைக்கு டிடி ஓக்களில் கிடைக்கிறது. சிஆர்ஏ முறையில் இணையவழி சந்தாதாரரின் பதிவு விவரங்களை டிடி ஓக்கள் பெறமுடியும். டிடிஓ மூலம் உள்ளிடப்பட்ட விவரங்கள் இணை பிஏஓ-க்களால்  சரிபார்க்கப்படுவது அவசியம். சிஆர்ஏ முறையில் பதிவு விவரங்கள் சரிப்பார்க்கப்பட்ட நிலையில் இணையவழி ப்ரான் உருவாக்கப்படும். பிஏஓக்களில் ஏற்கனவே கிடைக்கும் செயல்முறைக்கான விரிவாக்கமாகவே இந்த வசதி உள்ளது.

2.

மத்திய குறைதீர் நிர்வாக முறையில் விரிவாக்கம்.

1. விசாரணை வகைமைகளுக்கு தொடர்ச்சியாகக் கேட்கப்படும் கேள்விகளும் (எஃப்ஏக்யூக்கள்) அவற்றுக்கான பதில்களும் சந்தாதாரர் மற்றும் (என்பிஎஸ் சந்தாதாரர் சார்பில் எழுப்பப்படும் குறைகளை) உள்ளிட்டு செய்தோருக்கு சிஜிஎம்எஸ்-செல் கிடைக்கின்றன். சிஜாஎம்எஸ் வழியாக சந்தாதாரர் எழுப்பும் எந்தக் கேள்விக்கும் தெரிவு செய்யப்பட்ட வகைமைகள் அடிப்படையில் எஃப்ஏக்யூக்-களும் பொருத்தமான பதில் கிடைக்கும்.

 

2. நிலுவையில் உள்ள குறைபாடுகள் குறித்து செயல்படுத்தும் அலுவலகத்திற்கு இருவாரங்களுக்கு ஒருமுறை உஷார்படுத்தும் மின்னஞ்சல் அனுப்பப்படுகிறது. இப்போது உஷார்படுத்துதல்கள் நிலுவையில் உள்ள அனைத்துக் குறைபாடுகளையும் அறியும் படி விரிவு படுத்தப்பட்டுள்ளது

 

3. இணை சந்தாதாரர்களுக்கு நிலுவையில் உள்ள குறிப்புகளைப் பதிவிறக்கம் செய்வதற்கு ஏபிஎஸ் மற்றும் என்பிஎஸ் லைட்-ன் கீழ் செயல்படுத்தும் அலுவலகத்திற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் எழுப்பப்பட்ட அனைத்துக் குறைபாடுகளுக்கும், தீர்வுகளுக்கும் மின்னஞ்சல் மூலம் ஒஷார்படுத்துதல்கள் என்பிஎஸ் லைட் மற்றும் ஏபிஒய் அலுவலகங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

 

4. சிஜிஎம்எஸ்-ன் கீழ் 15 நாட்களுக்கு மேல் நிலுவையில் உள்ள குறைபாடுகள் தொடர்பான உஷார்படுத்துதல்கள் ஏபிஒய் மற்றும் என்பிஎஸ்-இன் கீழ் மேற்பார்வை அலுவலகங்களுக்கு இருவாரங்களுக்கு ஒருமுறை மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படுகின்றன.

3.

தவறு சரிசெய்யும் அலகு (இஆர்எம்)

 

சிஆர்எம் முறையில் யாருடைய பங்களிப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளனவோ அவற்றின் வழி இஆர்எம் வேண்டுகோள்களை செயல்படுத்தும் அலுவலகத்தால் நடைமுறைப்படுத்த முடியும். அத்துடன் மாநில அரசு விஷயத்தில் அனைத்து செயல்படுத்தும் அலுவலகங்கள் சார்பிலான ஒற்றை இஆர்எம் பரிமாற்றத்தை செயல்படுத்தும் வசதி மேற்பார்வை அலுவலகத்திற்கு உள்ளது. பல்வேறு செயல்படுத்தும் அலுவலகங்களால் பெறப்படும் பலவகையான இஆர்எம் வேண்டுகோளுக்கான நேரமும் முயற்சியும் மிச்சமாகும்.

4.

இணையவழி கார்பரேட் பதிவு

இஎன்பிஎஸ் தளத்தின் வழி கார்பரேட்டுகள் இணையத்தில் பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. பதிவுக்குத் தேவையான விவரங்களைக் கார்பரேட் அளிப்பதோடு கூட்டாக ஒரு பிஓபி-ஐத் தெரிவு செய்து மேல் நடவடிக்கைகளுக்குப் பொருத்தமான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். கார்பரேட்டால் பெறப்பட்ட பதிவு விவரங்களை கூட்டிணைவான பிஓபி அங்கீகரிக்க வேண்டும்.

5.

ஓய்வு ஆலோசகர்

என்பிஎஸ் சென்று சேர்வதை மேலும் விரிவாக்குவதற்காக என்பிஎஸ் பற்றி ஆலோசனை கூறுவதற்கு ஓய்வு ஆலோசகர்கள், (ஆர்என்ஏக்கள்) பிஎஃப்ஆர்டிஏ-வால் நியமிக்கப்படுகிறார்கள். இந்த ஆர்ஏக்கள் தனிநபராக, பதிவு செய்யப்பட்ட பங்குதாரர் நிறுவனமாக, கார்பரேட் அமைப்பாக, அல்லது பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை அல்லது சங்கமாக இருக்கலாம். தனிநபரை / நிறுவனத்தை ஆர்ஏவாகப் பதிவு செய்வதற்கு வசதியாக இணையதள மேடை உருவாக்கப்பட்டு சிஆர்ஏ-வில் வெளியிடப்பட்டுள்ளது.

6.

செயல்படுத்தும் அலுவலக இணையத்திலிருந்து அறிக்கைகள்/எம்ஐஎஸ்-ஐ திரும்பப் பெறுதல்

சிறப்பான கண்காணிப்புக்காக செயல்படுத்தும் அலுவலகங்களுக்கு திரும்பப் பெறுதல் தொடர்பான கூடுதல் தகவல்கள் இப்போது கிடைக்கச்செய்யப்பட்டுள்ளன.

 

) திரும்பப் பெறும் விண்ணப்படிவங்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால் இணையதளவழி திரும்பப்பெறும் வேண்டுகோள் செயல் முறைக்கு வராது.

 

பி) இணையவழி திரும்பப்பெறுதல் செயல்முறைக்கு வந்த விஷயங்களில் படிவ முறையில் விண்ணப்பங்கள் ஏற்கப் படாது.

 

சி) இணையவழி திரும்பப்பெறுவதற்கான வேண்டுகோள்கள் அங்கீகரிப்புக்காக நிலுவையில் உள்ளது.

7.

சிஆர்ஏ-க்குக் கட்டணமில்லாமல் புதிய தொலைபேசி எண்கள்

பொதுவான விசாரணைகள் மற்றும் புகார்கள் தொடர்பாக சிஆர்ஏ வுடன் தொடர்பு கொள்வதற்கு செயல்படுத்தும் அலுவலகங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் (1800222081) வழங்கப்பட்டுள்ளது. என்பிஎஸ் சந்தாதாரர்களுக்கு தற்போதுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்ணோடு (1800222080) கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 1501826) வருகையாளர் எண்ணிக்கை : 111
இந்த வெளியீட்டை படிக்க: English