நிதி அமைச்சகம்

நபார்டு: 85.77 லட்சம் சுய உதவி குழுக்கள் வங்கிகளில் ரூ. 16,114 கோடிக்கு மேற்பட்ட தொகையை டெபாஸிட்களாக வைத்துள்ளன.

10 கோடி கிராமப்புற குடும்பங்கள் இதில் இணைந்துள்ளன

Posted On: 04 AUG 2017 5:16PM by PIB Chennai

தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி (NABARD, ) 2017 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியன்றுவெளியிட்டுள்ள தகவல்களின்படி85.77 லட்சம் சுய உதவி குழுக்கள் ((SHGs) வங்கிகளில் ரூ. 16,114 கோடிக்கு மேற்பட்ட தொகையை டெபாஸிட்களாக வைத்துள்ளன. இந்தக் குழுக்களில் 10 கோடிக்கு மேற்பட்ட கிராமப்புற குடும்பங்கள் இணைத்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நபார்டு வங்கியின் அறிக்கையின்படி மொத்த சேமிப்புகளில் சுமார் 70% குழுக்களில்  உள்ளவர்களுக்கே கடன் வழங்கப் பயன்படுத்தப்படுகிறது;  30% வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகின்றன. அதாவது வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் தொகையைவிட இரு மடங்கு தொகை, குழுக்களுக்குள் கடன் வழங்கிட பயன்படுத்தப்படுகின்றன.

 

       கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.94934 கோடி,  பொருத்தமான வட்டி விகிதங்களில் பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளது.  தீன் தயாள் அந்த்யோத்யா திட்டம்-தேசிய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் (DAY-NRLM) கீழ் ஆண்டுக்கு 7% வட்டியில், வகை-1இல் இருக்கும் 250 மாவட்டங்களின் பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு கடன்கள் அளிக்கப்படுகின்றன. இதில் சரியாக கடன் செலுத்துவோர்க்கு ஊக்கத் தொகையாக 3% வட்டி குறைக்கப்படுகிறது. இதனால் அவர்கள் செலுத்த வேண்டிய வட்டி, உண்மையில் ஆண்டுக்கு 4% மட்டுமே.

 
       இந்தத் தகவல், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் திரு சந்தோஷ் குமார் கங்வார் அவர்கள் இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் தரப்பட்டது.

 

 

 



(Release ID: 1501822) Visitor Counter : 117


Read this release in: English