சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மருத்துவ கல்வி

Posted On: 04 AUG 2017 1:14PM by PIB Chennai
இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம், 1956 ஐ ஆய்வு செய்யவும், இந்திய மருத்துவ கவுன்சிலை (MCI) நவீனப்படுத்தவும் மற்றும் தற்போதைய சூழ்நிலைகளுக்கு பொருத்தமானதாக ஆக்கவதற்குமான பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு வழங்கிட பேராசிரியர் ரஞ்சித் ராய் சௌத்ரி தலைமையில் மத்திய அரசு நிபுணர் குழு (GOE)  ஒன்றை அமைத்திருந்தது.  இந்த நிபுணர் குழுவின் அறிக்கையானது, சுகாதார மற்றும் குடும்ப நலன் குறித்த பாராளுமன்ற நிலைக்குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டது;  அவர்களும் சில பரிந்துரைகளை செய்துள்ளனர். இந்திய மருத்துவ கவுன்சிலில் செய்யப்படவேண்டிய சீர்திருத்தங்களுக்கான அனைத்து வாய்ப்புகளையும் ஆய்வு செய்வதற்கும்,  அவற்றை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளைக் கூறவும்  நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் தலைமையிலான நான்கு உறுப்பினர்கள் கொண்ட  குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. MCIக்கு பதிலாக NMCயை அமைப்பதற்கு வழிவகுக்கும், தேசிய மருத்துவ ஆணையம் (NMC) மசோதாவின் வரைவை இந்தக் குழு உருவாக்கியுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட அமைச்சர்களின் குழு இந்த வரைவை மீண்டும் பரிசீலித்தது. சில மாற்றங்களுடன் இந்த வரைவு மசோதாவிற்கு அமைச்சர்களின் குழு ஒப்புதல் அளித்துள்ளது. முன்மொழியப்பட்ட தேசிய மருத்துவ ஆணையத்தில் மேல் முறையீட்டு தீர்ப்பாயம் ஒன்றும் நான்கு வாரியங்களும் இருக்கும்;  இளநிலை பட்டதாரி மருத்துவக் கல்வி வாரியம் (UGMEB),  முதுநிலை பட்டதாரி மருத்துவ கல்வி வாரியம் (PGMED), மருத்துவ மதிப்பீடு மற்றும் தரவகைப்படுத்தல் வாரியம் (MARB ),  மற்றும் நெறிமுறைகள் மற்றும் மருத்துவப் பதிவு வாரியம் (EMRB).
       இந்தத் தகவல், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை இணை அமைச்சர் திரு ஃபாகன் சிங் குலாஸ்தி அவர்கள் இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் தரப்பட்டது.

(Release ID: 1501820) Visitor Counter : 164
Read this release in: English