பிரதமர் அலுவலகம்

ஆசிரியர் தினத்தன்று ஆசிரிய சமூகத்திற்கு பிரதமர் வணக்கம்; முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளில் அன்னாருக்கு பிரதமர் நினைவஞ்சலி

இடுகை இடப்பட்ட நாள்: 05 SEP 2017 1:15PM by PIB Chennai

ஆசிரியர் தினத்தன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆசிரிய சமூகத்திற்கு வணக்கங்களைத் தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளில் அன்னாருக்கு பிரதமர் நினைவஞ்சலி செலுத்தினார்.

“சமுதாயத்தில் அறிவை வளர்த்தெடுக்கவும், கல்வி தரும் மகிழ்ச்சியைப் பரப்பவும் தம்மை அர்பணித்துக் கொண்டுள்ள ஆசிரிய சமூகத்திற்கு ஆசிரியர் தினத்தன்று எனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிகச் சிறந்த ஆசிரியராகவும், அரசியல் மேதையாகவும் திகழ்ந்த டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணனுக்கு எனது நினைவஞ்சலிகள்.

நமது கனவான `புதிய இந்தியா’வை நனவாக்குவதில் ஆசிரியர்களுக்கு மையப் பங்கு இருக்கிறது. இவர்களது பணி ஆய்வையும், புத்தாக்கத்தையும் தூண்டக்கூடியது.

`மாற்றத்துக்காக கற்பிப்போம், அதிகாரமளிக்க கல்வியளிப்போம், தலைமையேற்க கற்றுத்தருவோம்’ என்பதை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு செயல்படுத்துவோம்” இவ்வாறு பிரதமர் கூறினார்.
 

 

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1501792) வருகையாளர் எண்ணிக்கை : 136
இந்த வெளியீட்டை படிக்க: English