சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சராக திரு முக்தர் அப்பாஸ் நக்வி பொறுப்பேற்றார்
प्रविष्टि तिथि:
04 SEP 2017 2:56PM by PIB Chennai
மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சராக திரு முக்தர் அப்பாஸ் நக்வி இன்று பொறுப்பேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு. நக்வி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அதிகாரமளித்தல் (“3E”- Education, Employment and Empowerment) என்பதே கடந்த மூன்று ஆண்டுகளாக எங்களின் குறிகோள்களாக உள்ளது. சிறுபான்மையினர் நலத் துறை, அனைத்து சிறுபான்மையினர்களுக்கும் சமூகம், பொருளாதாரம், கல்வி ஆகியவற்றில் வளர்ச்சியை உறுதி செய்யவும், சிறுபான்மையினருக்கு கண்ணியத்துடன் அதிகாரம் அளிப்பதிலும் அரசு உறுதியாக உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
அனைத்து சிறுபான்மையினர் நலத் திட்டங்களும் அடிதட்டு மக்களுக்கு சிறப்பாக அமலாக்கம் செய்யப்பட்டு உள்ளது. “அனைவரும் உள்ளடங்கிய வளர்ச்சி மற்றும் நம்பிக்கையான சூழல்” என்பதே எங்களின் வாக்குறுதியாகும் என்று திரு நக்வி கூறினார்.
*****
(रिलीज़ आईडी: 1501761)
आगंतुक पटल : 118
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English