பிரதமர் அலுவலகம்

சீனாவின் ஜியாமென் நகரில் நடைபெறும் 9வது பிரிக்ஸ் மாநாட்டின் துவக்க விழாவில் உரையாற்றிய பிரதமரின் உரை

Posted On: 04 SEP 2017 2:31PM by PIB Chennai

மேதகு

அதிபர் ஜி ஜின்பிங்,

அதிபர் ஜேக்கப் சூமா,

அதிபர் மிச்செல் டெமர்,

அதிபர் விளாடிமிர் புதின்,

இந்த மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளதற்காகவும், அன்பான வரவேற்பிற்காகவும் அதிபர் ஜி அவர்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்து நான் துவங்குகிறேன். குறுகியகால வேளையின்போது நடைபெற்ற எங்களது கலந்துரையாடல் ஆக்கபூர்வமாக இருந்தது. அது எங்களது பரஸ்பர புரிதலையும், முன்னோக்குதலையும் அதிகரித்துள்ளது. தோற்றுவிக்கப்பட்ட பத்தாண்டுகளுக்கு பின்பாக, பிரிக்ஸ், கூட்டுறவிற்கான வலுவான வடிவமைப்பை உருவாக்கியுள்ளது. உறுதியற்ற தன்மையை நோக்கி உலகம் செல்லும் நிலையில், நாம் நிலைத் தன்மைக்கும், வளர்ச்சிக்கும் பங்களிக்கிறோம். நமது கூட்டுறவிற்கு வணிகம் மற்றும் பொருளாதாரம் அடிப்படையாக இருப்பினும், நாம் மேற்கொண்டிருக்கும் முயற்சிகள், தொழில்நுட்பம், பாரம்பரியம், கலாச்சாரம், விவசாயம், சுற்றுச்சூழல், எரிசக்தி, விளையாட்டு மற்றும் தகவல், தொடர்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளை இன்று எட்டியுள்ளது. பிரிக்ஸ் நாடுகளில் உள்கட்டமைப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான ஆதாரங்களை சேகரிக்கும் வண்ணம், புதிய வளர்ச்சி வங்கி கடன்களை வழங்க துவங்கியுள்ளது. அதே நேரத்தில், நமது மத்திய வங்கிகளும் தொகுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையாக செயல்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. இவையே நாம் முன்னேற்றத்திற்காக உருவாக்கும் மைல்கல்களாகும். முன்னோக்கி பார்க்கையில், நமது பயணத்தின் மையத்தில் நமது மக்கள் இருப்பது மிகவும் முக்கியமானதாகும். கடந்த ஆண்டு முதல், எங்களது பரிமாற்றங்கள் மக்களிடமிருந்து மக்களுக்கு என்ற நிலையில் சீனா முன்னெடுத்து செல்வது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இத்தகைய இடைத்-தொடர்புகள் நமது தொடர்புகளை ஒருங்கிணைப்பதுடன், நமது புரிதல்களையும் ஆழப்படுத்தும்.

மேன்மையானவர்களே,

மாற்றத்திற்கான இந்தியாவின் நீண்ட கால பயணம், எங்களது மக்களுக்கு பெருமையான இடத்தை அளித்துள்ளது. வறுமையை ஒழிக்கவும்; உடல்நலம், சுகாதாரம், திறன்கள், உணவு பாதுகாப்பு, பாலின சமத்துவம், எரிசக்தி, கல்வி மற்றும் கண்டுபிடிப்புகளை உறுதி செய்வதற்கு நாங்கள் இயக்கமான நிலையில் செயல்படுகிறோம். தேசியத் திட்டங்களான தூய்மையான கங்கை, புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி, டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் நகரங்கள், அனைவருக்கும் வீடு மற்றும் திறன் இந்தியா ஆகியவை தூய்மை, பசுமை மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கின்றன. மேலும், அவை எங்களது 800 மில்லியன் இளைஞர்களின் ஆக்கப்பூர்வமான ஆற்றலை வெளிக் கொணர்கிறது. எங்களது பெண்களுக்கான அதிகாரமளிக்கும் திட்டங்கள், தேச கட்டமைப்பு நீரோட்டத்தில பெண்களின் பங்கை பன்மடங்கு உயர்த்தியுள்ளன. கருப்புப்பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக போராட்டத்தை நாங்கள் தீவிரப்படுத்தியுள்ளோம். எங்களது தேசிய அனுபவங்களை அடிப்படையாக கொண்டு, முன்னோக்கி செல்வதற்கு, பிரிக்ஸ் நாடுகள் இருதரப்பும் வெற்றி பெறும் வகையிலான கூட்டமைப்பை ஆழப்படுத்த வேண்டும். பரஸ்பர கூட்டுறவை உயர்த்துவதற்காக சில சிந்தனைகள் நினைவிற்கு வருகின்றன. முதலில், கடந்த ஆண்டு பிரிக்ஸ் தரநிர்ணய முகமையை உருவாக்கிட நமது முயற்சிகளை அளிப்பது குறித்து விவாதித்தோம். அப்போதிலிருந்தே, அத்தகைய முகமை ஒன்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து வல்லுநர் குழு ஒன்று ஆராய்ந்து வருகிறது. அதன் உருவாக்கத்திற்கான திட்டத்தை விரைவில் இறுதி செய்ய வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். இரண்டாவது, நமது மத்திய வங்கிகள் தங்களது திறன்களை மேலும் வலுப்படுத்துவதுடன், தொகுப்பு பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் ஐ.எம்.எப். இடையேயான கூட்டுறவை ஊக்குவிக்க வேண்டும். மூன்றாவது, குறைந்தவிலையில், நம்பகமான மற்றும் நிலையான அணுகுதல் எரிசக்தி கிடைக்கப் பெறுதல் நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும். பருவகாலநிலை நெகிழ்திறன் வளர்ச்சியானது, நம்மை கிடைக்கப் பெறும் வள ஆதாரங்களையும் பயன்படுத்த செய்கிறது. இதனை அங்கீகரிக்கும் வகையில், இந்தியா, பிரான்சுடன் இணைந்து, 2015, நவம்பரில் – சர்வதேச சூரிய எரிசக்தி கூட்டணி (ஐ.எஸ்.ஏ.) – என்ற மிகப் பெரிய சர்வதேச முனைப்பை துவங்கியுள்ளது. மேம்படுத்தப்பட்ட சூரிய எரிசக்தி பயன்பாட்டு மூலம் பரஸ்பர நன்மைகளை பெறுவதற்கான 121 நாடுகளின் கூட்டணியை இது ஏற்படுத்தும். சூரிய எரிசக்தியை வலுப்படுத்திய பிரிக்ஸ் நாடுகள் ஐ.எஸ்.ஐ. உடன் நெருங்கி பணியாற்றலாம். புதுப்பிக்கத்தக்க மற்றும் சூரிய எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான கூடுதல் திறன்கள் மற்றும் சக்திகளை நமது ஐந்து நாடுகளும் பெற்றுள்ளன. அத்தகைய கூட்டுறவிற்கு ஆதரவு அளிப்பதற்காக என்.டீ.பீ, ஐ.எஸ்.ஏ. உடன் பயனான இணைப்பை ஏற்படுத்த வேண்டும். என்.டீ.பீ.-யிருந்து தூய்மையான எரிசக்திக்கு, குறிப்பாக சூரிய சக்திக்கு, நாம் அதிக நிதியளிக்க வேண்டும். நான்காவது, நமது தேசங்கள் அதிகளவிலான இளைஞர்களை கொண்டுள்ளன. நமது கூட்டு நடவடிக்கைகளில் இயன்றவரை நமது இளைஞர்களை பங்களிக்க வைக்க வேண்டும். திறன் வளர்ப்பில் கூட்டுறவு மற்றும் சிறந்த பழக்கங்களை பரிமாறிக்கொள்ளுதல் ஆகியவற்றை மேம்படுத்துவது முக்கிய கருவிகளாக விளங்கும். ஐந்தாவது, நாம் கடந்த ஆண்டு, கோவா மாநாட்டில், நமது நகரங்களுக்கிடையே கூட்டுறவு ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் ஸ்மார்ட் நகரங்கள், நகரமயமாக்கல் மற்றும் பேரழிவு மேலாண்மை குறித்த எண்ணங்களை பரிமாறிக் கொண்டோம். இப்பாதையை நாம் மேலும் அதிகரிக்க வேண்டும். ஆறாவது, அடுத்த தலைமுறைக்கான உலகளாவிய முன்னேற்றம் மற்றும் மாறுதலுக்கு தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளே அடித்தளமாகும். மேலும், வறுமை மற்றும் ஊழலை எதிர்த்து போராடுவதற்கு மதிப்புமிக்க கருவிகளாக தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் விளங்குவதை இந்தியா கண்டுள்ளது. கண்டுபிடிப்பு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவற்றில் வலுவான பிரிக்ஸ் கூட்டமைப்பு, முன்னேற்றத்திற்கு உதவுவதுடன், வெளிப்படைத்தன்மை ஊக்குவிப்பதுடன், நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு உதவும். பிரிக்ஸ் வடிவமைப்பின் கீழ், தனியார் தொழிற்நிறுவனம் உள்ளிட்ட, கூட்டு முன்னோடி திட்டத்தை பரிசீலிக்க வேண்டும் என நான் ஆலோசனை வழங்குகிறேன். இறுதியாக, திறன்கள், உடல்நலம், உட்கட்டமைப்பு, உற்பத்தி மற்றும் இணைப்பு ஏற்படுத்துதல் போன்ற துறைகளில் பிரிக்ஸ் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிடையே அதிகளவிலான திறன்வளர் கூட்டு ஏற்பட இந்தியா மகிழ்ச்சியுடன் பணியாற்றும்.

மேன்மையானவர்களே,

கடந்த பத்தாண்டுகளில், நமது நாடுகளின் இருதலைமுறையை சேர்ந்த தலைவர்கள் பிரிக்ஸ்-ன் தோற்றத்திற்காக மற்றும் உருவாக்குவதற்காக பங்களித்துள்ளனர். நாம் நம்பகத்தன்மையை பெற்றுள்ளதுடன், செல்வாக்கை வளர்த்துக் கொண்டதுடன் வளர்ச்சியையும் பெற்றுள்ளோம். தற்போது, அடுத்த பத்தாண்டுகள் மிக முக்கியமானது. ஒருவிதமான சுற்றுச்சூழலில், நிலைத்தன்மை, நிலையான வளர்ச்சி மற்றும் வளம் ஆகியவற்றை நாம் தேடுகிறோம். இத்தகைய மாற்றத்திற்கு கொண்டு செல்வது பிரிக்ஸ் தலைமைக்கு மிக முக்கியமானதாகும். இத்துறைகளில், நாம் பிரிக்ஸ் என்ற அளவில், கூட்டப்பொருளை நிர்ணயித்தால், அதனை இவ்வுலகம் பொற்காலமான பத்தாண்டுகள் என அழைக்கும். வளர்ந்துவரும் சந்தையை நாம் அணுக வேண்டியது குறித்து, நாளை இது தொடர்பாக சில உத்திகளை நான் பகிர்ந்துக் கொள்கிறேன். கூட்டமைப்பின் புதிய உச்சத்தை அடைவதற்கான நமது பகிரப்பட்ட பயணத்தில், இது பிரிக்ஸ்-ற்கு உதவும் என நான் நம்புகிறேன். நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
 

*****



(Release ID: 1501737) Visitor Counter : 142


Read this release in: English