உள்துறை அமைச்சகம்

மத்திய உள்துறை செயலராக திரு ராஜிவ் கவ்பா பொறுப்பேற்பு

Posted On: 31 AUG 2017 10:31AM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலராக திரு ராஜிவ் கவ்பா பொறுப்பேற்றுள்ளார். இவர் 1982 தொகுப்பு ஜார்கண்ட் பிரிவைச் சேர்ந்தவர்.

கடந்த ஜுன் 27 அன்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு அலுவலராக திரு. கவ்பா பொறுப்பேற்றார். உள்துறை அமைச்சகத்தின் செயலர் திரு. ராஜிவ் மெகரிஷி ஓய்வு பெற்றதையோட்டி இவர் பொறுப்பேற்றுள்ளார்.

இதற்கு முன்பு திரு கவ்பா மத்திய நகர மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் செயலராகப் பணிபுரிந்தார். சர்வதேச அமைப்புகள், தேசிய மற்றும் மாநில அரசுகளில் மூத்த பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. 1959-ல் பிறந்த திரு. கவ்பா  பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் இயற்பியல் பாடத்தில் பட்டம் பெற்றவர்.

ஜார்கண்ட் மாநிலத்தின் தலைமைச் செயலராக பணிபுரிந்த திரு கவ்பா மத்திய அரசின் உள்துறை, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் வனம், மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகங்களிலும் பணிபுரிந்துள்ளார்.

சர்வதேச நிதிய (IMF) வாரியத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக நான்கு ஆண்டுகள் திரு. கவ்பா பணிபுரிந்துள்ளார்.



(Release ID: 1501381) Visitor Counter : 88


Read this release in: English