குடியரசுத் தலைவர் செயலகம்

குடியரசுத் தலைவர் நாளை ஆந்திரா பயணம்

Posted On: 31 AUG 2017 12:56PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் நாளையும், நாளை மறுநாளும் ஆந்திரப் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

குடியரசு தலைவர் நாளை, செப்டம்பர் 1 அன்று ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் நிறுவனம் – ஸ்ரீ பத்மாவதி மருத்துவ கல்லூரியின் புதிய மருத்துவமனை கட்டிடத்தைத் துவக்கி வைக்க உள்ளார். அதன் பிறகு, திருப்தியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலைக் கல்லூரி மைதானத்தில் சமூக வரவேற்பு மற்றும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

தில்லி திரும்பும் முன், செப்டம்பர் 2-ஆம் தேதியன்று, திருப்தி திருமலையில் உள்ள ஸ்ரீ வராஹா சுவாமி வாரு கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார். 

******


(Release ID: 1501380) Visitor Counter : 153


Read this release in: English