பிரதமர் அலுவலகம்
பிரகதி மூலம் பிரதமர் கலந்துரையாடல்
Posted On:
30 AUG 2017 5:24PM by PIB Chennai
தகவல், தொடர்பு, தொழில்நுட்பம் அடிப்படையிலான, செயல்திறன் சார் ஆளுமை மற்றும் உரிய நேரத்தில் செயலாக்கத்திற்கான பல்-மாதிரி தளமான-பிரகதி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது 21வது கலந்துரையாடலை நிகழ்த்தினார்.
பிரகதியின் முதல் 20 கூட்டத்தில், ரூ.8.79 லட்சம் கோடி மொத்த முதலீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் 183 திட்டங்கள் குறித்த ஒட்டுமொத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 17 துறைகளில் பொதுமக்களின் குறைகளுக்கான தீர்வு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இன்றைய 21வது கூட்டத்தில், காப்புரிமைகள் மற்றும் வணிகமுத்திரைகள் தொடர்பான குறைகளை கையாளுதல் மற்றும் தீர்வு குறித்து ஆய்வு மேற்கொண்டார். செயல்திறனில் முன்னேற்றத்தை அறிந்துக்கொண்ட அவர், காப்புரிமைகள் மற்றும் வணிகமுத்திரைகள் விண்ணப்பங்கள் மீது மேலும் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். அதிகரிக்கப்பட்ட மனிதசக்திகள் உட்பட, காப்புரிமைகள் மற்றும் வணிகமுத்திரைகளுக்கு விரைவாக அனுமதியளிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விவரித்தனர். இதில் உலகத் தரத்தினை எட்டும் வகையில், வழிமுறைகளை ஒழுங்குபடுத்திட சமீபத்திய தொழில்நுட்பங்களின் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார்
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், அரியானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தராகண்ட், பஞ்சாப், மேற்கு வங்காளம், கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், பீகார், ஒடிசா, தெலங்கானா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் ரயில்வே, சாலை, எரிசக்தி மற்றும் எண்ணெய் குழாய் மற்றும் சுகாதார துறைகளில் ரூ.56,000 கோடி மதிப்பீட்டிலான ஒன்பது முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார். இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில், தில்லி மும்பை தொழிற்துறை தாழ்வாரம் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் மங்களகிரி, மேற்கு வங்காளத்தில் கல்யாணி, மகராஷ்டிரத்தில் நாக்பூர் மற்றும் உத்தர பிரதேசத்தில் கோரக்பூர் ஆகிய நான்கு இடங்களில் கட்டப்படும் புதிய ஏ.ஐ.ஐ.எம்.எஸ்.-ம் அடங்கும்.
ஸ்மார்ட் நகரங்கள் இயக்கம் முன்னேற்றம் குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார். சவாலான பாதைகளில் நகரங்களின் பங்களிப்பை பிரதமர் பாராட்டினார். உயர் தரத்துடன், கண்டறியப்பட்ட 90 நகரங்களில் பணிகளின் செயலாக்கம் மற்றும் விரைவாக நிறைவேற்றுவதே தற்போது ஒவ்வொருவரின் முன்னுள்ள சவால் ஆகும் என்றார் அவர்.
வன உரிமைச் சட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த பிரதமர், பழங்குடியினச் சமூகங்களின் உரிமைகளை தீர்மானிக்கவும், அவர்களுக்கு விரைவாக கேட்புத்தொகை வழங்கிடவும் வான் தொழில்நுட்பத்தை பயன்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்,
சரக்கு மற்றும் சேவை வரி குறித்த ஐயங்கள் தேவையற்றது என நிரூபணமானதுடன், சுமூகமான முறையில் மாற்றம் நிகழ்ந்ததுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். அனைத்து தலைமைச் செயலாளர்களையும், சரக்கு மற்றும் சேவை வரியின் கீழான பதிவுகளை அதிகரிக்கச் செய்யும் முயற்சிகளை ஊக்குவிக்கவும், ஒரு மாத காலத்திற்குள் அதன் எண்ணிக்கையை பன்மடங்கு உயர்த்திட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
அரசின் இணைய-விற்பனைச் சந்தை (ஜி.இ.எம்.) குறித்து அவர், அந்த இணையதளம் வெளிப்படைத்தன்மையை அதிகரித்துள்ளதுடன், தேவையற்ற செலவினங்களை குறைத்துள்ளது என்றார். அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும், அரசு கொள்முதலில் இணைய-விற்பனைச் சந்தைக்கு (ஜி.இ.எம்.) முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
***
(Release ID: 1501326)
Visitor Counter : 118