பிரதமர் அலுவலகம்
கூடுதல் செயலாளர்கள் மற்றும் இணை செயலாளர்களுடன் பிரதமரின் நான்காவது கலந்துரையாடல்
Posted On:
31 AUG 2017 10:38AM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி புதன் கிழமையன்று இந்திய அரசின் 80 கூடுதல் செயலர்கள் மற்றும் இணை செயலாளர்களுடன் கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடல் மொத்தம் நடைபெற உள்ள ஐந்து கலந்துரையாடலில் நான்காவது ஆகும்.
இந்த கலந்துரையாடலின் போது, ஆளுமை, சுகாதாரப் பேணல், சுகாதாரக் கல்வி, வேளாண்மை, நீர் வளம், மின் ஆளுமை, வரி நிர்வாகம் மற்றும் ஜி.எஸ்.டி., வர்த்தகம் புரிவதை எளிமைப்படுத்துதல், குறைகள் தீர்ப்பு மற்றும் குழந்தைகள் உரிமைகள் உள்ளிட்டவைகளில் தங்களுக்கு கிடைத்த அனுபவங்களை பிரதமருடன் அதிகாரிகள் பகிர்ந்து கொண்டனர்.
அதிகாரிகள், ஆளுமை நடைமுறைகளை மேம்படுத்துவது தொடர்பாக பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். மனித நேயத்துடன் செயல்படும் குழு உணர்வை மேம்படுத்த உதவும் என்றும் அதன் மூலம் கூட்டு பலன்கள் கிடைக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
தற்போதைய ஆக்கபூர்வமான உலகளாவிய சூழல் இந்தியாவிற்கு ஆதரவாக இருப்பதை குறிப்பிட்ட பிரதமர், 2022 ஆம் ஆண்டு புதிய இந்தியாவை உருவாக்குவது என்ற தெளிவான குறிக்கோளுடன் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
(Release ID: 1501325)
Visitor Counter : 109