நிதி அமைச்சகம்

ஜி எஸ் டி வருவாய் விவரம் – 2017 ஜூலை

Posted On: 29 AUG 2017 7:00PM by PIB Chennai

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி எஸ் டி ) 2017 ஜுலை முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்தது.  2017 ஜூலை மாத ஜி எஸ் டி வரி செலுத்துவதற்கான கடைசி தேதி 2017 ஆகஸ்ட் 25 ஆகும்.  இந்த மாற்றத்திற்கான கால அவகாசத்திற்கு வழங்கப்பட்ட இறுதி தேதி 2017 ஆகஸ்ட் 28.   இதர அம்சங்களுக்கு கடைசி தேதி 2017 ஆகஸ்ட் 25-ஆகவே இருந்தது. 

 

2017 ஆகஸ்ட் மாதத்தில் ஜி எஸ் டி இணைய தளத்தில் 2017 ஆகஸ்ட் மாதத்தில்  பதிவு செய்து கொண்டவர்களும், விற்பனையாளர்களும் சேர்த்து 2017 ஜூலை மாதம் மொத்தம் வரிக்கணக்கு தாக்கல் செய்ய வேண்டியவர்கள் எண்ணிக்கை 59 புள்ளி ஐந்து ஏழு லட்சமாகும்.  இதில் 2017 ஆகஸ்ட் 29 வரை (காலை 10 மணி) 38 புள்ளி மூன்று எட்டு லட்சம் பேர் கணக்கு தாக்கல் செய்தார்கள்.  இது .  2017 ஜூலை மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டிய மொத்த கணக்கில் 64 புள்ளி நான்கு இரண்டு சதவீதமாகும். 

 

2017 ஆகஸ்ட் 29 (காலை 10 மணி)  வரை பல தலைப்புகளில் வசூலான ஜிஎஸ்டி ரூ.92,283 கோடியாகும்.  இதில் மத்திய ஜி எஸ் டி வருவாய் ரூ. 14,894 கோடி.  மாநில ஜி எஸ் டி வருவாய் ரூ.22,722 கோடி. ஒருங்கிணைந்த ஜி எஸ் டி வருவாய் ரூ.47,469 கோடி.  (இதில் இறக்குமதி மூலம் கிடைத்த ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 20,964 கோடி.  மற்றும் செஸ் (தீர்வை) இதன்மூலம் ரூ. 7,198 கோடி.  (இதில் இறக்குமதியிலிருந்து இழப்பீடாக பெற்ற செஸ் ரூ.599 கோடி)  ஒருங்கிணைந்த ஜி எஸ் டி மூலம் கிடைக்கும் வருவாய் மத்திய ஜிஎஸ்டி க்கும், மாநில ஜிஎஸ்டி க்கும் ஒதுக்கீடு செய்யப்படும்.  ஜி எஸ் டி வலைதளம் மூலம் பெறப்படும் பயன்பாட்டு அறிக்கை அடிப்படையில் இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும்.  இந்த ஒதுக்கீடு இம்மாத இறுதியில் முடிவடைந்த்தும் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் கிடைக்கும் ஜி எஸ் டி வருவாய் எவ்வளவு என்ற சரியான கண்க்கு தெரிய வரும். 

 

மொத்தமுள்ள 72 புள்ளி மூன்று மூன்று லட்சம் வரி செலுத்துவோரில் 58 புள்ளி ஐந்து மூன்று பேர் ஒருங்கிணைந்த ஜி எஸ் டி வரி முறைக்குள் வந்து விட்டார்கள்.  13 புள்ளி எட்டு பூஜ்யம் வரி செலுத்துவோர் இதற்கான நடைமுறைகளில் ஈடுபட்டுள்ளார்கள். 2017 ஆகஸ்ட் 29 ( காலை 10 மணி ) வரையிலான காலத்தில் புதிதாக பதிவு செய்த வரி செலுத்துவோர் எண்ணிக்கை 18 புள்ளி எட்டு மூன்று லட்சமாகும்.

 



(Release ID: 1501282) Visitor Counter : 181


Read this release in: English