வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
புதிய தொழில் கொள்கை உதயம்
Posted On:
29 AUG 2017 5:38PM by PIB Chennai
தொழில் கொள்கை மற்றும் தொழில் ஊக்குவிப்பு துறையும் வர்த்தகம் மற்றும் தொழில் துறையும் இணைந்து 2017 மே மாதத்திற்கான புதிய தொழில் கொள்கையை வகுப்பதற்கான முயற்சிகளை தொடங்கியுள்ளன. 1991 ல் தொழில் கொள்கை அறிவிக்கப்பட்டது முதல் இந்திய பொருளாதாரம் உலகிலேயே வேகமான வளர்ச்சி கொண்டதாக மாறியுள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் நிறைவேற்றப்பட்ட புதிய சீர்திருத்தங்களும் பரந்த பொருளாதார அடிப்படைகளும் உலக அளவில் போட்டியிடத்தக்கதாக இந்திய தொழில்களை மேம்படுத்துவதற்கு பல புதிய திட்டங்களையும் உத்திகளையும் வழங்கியுள்ளது. இதனால், உலகளவில் போட்டியிடக்கூடிய திறன் படைத்ததாக இந்திய தொழில்களை மாற்றுவதற்கு புதிய உத்திகள் வகுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இருந்து வரும் தேசிய உற்பத்திக் கொள்கை புதிய தொழில் கொள்கைக்குள் அடங்கிவிடும்.
புதிய தொழில் கொள்கையை உருவாக்க கலந்தாலோசனை அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டது. தொழில்களின் சில பிரிவுகள் சந்திக்கும் சவாலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து தீர்வு காண்பதற்கான ஆலோசனை தெரிவிக்க ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுக்களின் ஆலோசனையும், தொழில்கள் மற்றும் தொழில் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலிருந்து ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. அரசு துறைகள், தொழில் அதிபர்கள் சங்கங்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோர் இந்தக் குழுக்களில் இடம் பெற்றார்கள். உற்பத்தி, சிறிய – நடுத்தரத் தொழில்கள், தொழில் நடத்துவதை எளிமைப்படுத்துதல், கட்டமைப்பு, முதலீடு, வர்த்தக மற்றும் நிதிக் கொள்கை, திறமை மற்றும் வேலை வாய்ப்பளிப்பதற்கான எதிர்காலச் சூழல் முதலிய பிரிவுகள் இந்தக் குழுக்களால் ஆய்வு செய்யப்பட்டது. தொழில் கொள்கையை வகுப்பதற்கான ஆலோசனைகளை வழங்க இந்தியாவின் பொருளாதார மறுமலர்ச்சி குறித்து கண்டறிய செயற்கையான நுண்ணறிவு பணிக்குழுவும் அமைக்கப்பட்டது.
இந்தியாவில் தயாரிப்போம் என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டு இந்தியாவை ஒரு உற்பத்தி மையமாக மாற்றுவதே புதிய தொழில் கொள்கையின் நோக்கமாகும். செயற்கையான நுண்ணறிவு, ரோபோ மூலமாக பணி ஆகியவையின் மூலம் உற்பத்தியை நவீன மயமாக்குவதும் நோக்கமாகும்.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுதொடர்பாக தொழிலதிபர்கள், சென்னை, குவஹாத்தி, மும்பை போன்ற இடங்களில் மாநில அரசின் சிந்தனையாளர்களுடன் கலந்து பேசுவார். 2017 அக்டோபர் மாதத்தில் தொழில் கொள்கை அறிவிக்கப்படக்கூடும். புதிய தொழில் கொள்கை பற்றி மக்களிடம் இருந்து கருத்துக்களை தொழில் துறை மற்றும் தொழில் ஊக்குவிப்புத் துறை வரவேற்கிறது. இந்த கருத்துக்களை பரிமாற்றம் செய்து கொள்ள தேவையான விவரங்கள் இந்த உரையுடன் உள்ளன. புதிய தொழில் கொள்கை பற்றிய எல்லா கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கோகிலா.ஜெயராம் என்ற இணையதளம் மூலம் தொழில் வளர்ச்சித் துறைக்கு அனுப்பி வைக்கலாம்.
********
(Release ID: 1501281)
Visitor Counter : 4056