விவசாயத்துறை அமைச்சகம்

மித வெப்ப பருவ நிலைகளில் விளைவிக்கக்கூடிய வீரிய பயிர் ரகம் 215 கண்டுபிடிக்கப்பட்டு 1918 ஆம் ஆண்டு வணிக ரீதியான பயிரிடுதலுக்காக தொடங்கி வைக்கப்பட்டது: திரு ராதா மோகன் சிங்

கரும்பு பயிரிடும் விவசாயிகள் எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளரிக்காய் முதலியவற்றை ஊடுபயிர் தொழில்நுட்பம் மூலம் விளைவித்து தங்களின் வருவாயையை பெருக்கிக் கொள்ள முடியும்: திரு சிங்

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த புதிய இந்தியாவை உருவாக்க உறுதி ஏற்போம் சாதிப்போம் முழக்க நிகழ்ச்சியில் கரும்பு ஆராய்ச்சியில் 100 ஆண்டுகள் மிகச்சிறந்த சாதனை படைத்த விஞ்ஞானிகள் இடையே திரு ராதாமோகன் சிங் உரையாற்றினார்.

Posted On: 29 AUG 2017 4:03PM by PIB Chennai

கர்னால் பிராந்திய மையத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்  ஏற்பாடு செய்திருந்த கரும்பு ஆராய்ச்சியில் 100 ஆண்டுகள் சாதனை (205 ரகம் முதல் 0238 ரகம் வரையிலான கரும்பு ரகங்கள் கண்டுபிடிப்பு மற்றும்  புதிய இந்தியா  இந்தியாவை உருவாக்க உறுதி ஏற்போம் சாதிப்போம் முழக்க  நிகழ்ச்சிகளில் மத்திய வேளாண் துறை  மற்றும் விவசாயிகள் நலன் துறை அமைச்சர் திரு ராதாமோகன் சிங் உரையாற்றினார். 1918 ஆம் ஆண்டு வணிக ரீதியாக பயிரிட தொடங்கி வைக்கப்பட்ட மிதவெப்ப பருவநிலைக்கான உயர் வீரிய 205 ரக கரும்பு பயிரை கண்டுபிடிப்பதில் டாக்டர் வெங்கட்ராமன் ஆற்றிய பணி குறித்து அவர் பாராட்டினார். இந்த வீரிய பயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் கரும்பு உற்பத்தி வட இந்தியாவில் 50 சதவீதம் அதிகரித்த்து என்றும் ஏற்கனவே  கண்டுபிடிக்கப்பட்டிருந்த வீரிய கரும்பு ரகங்களான  சக்கராம் பார்பரியும் சக்கராம் சினசிசும் மிகமிக பின்தங்கிவிட்டன என்றும் கூறினார்.

 

வீரிய வகை கரும்பு ரகம் 205 –ஐ கண்டுபிடித்த பின் மிதவெப்ப பருவநிலையில் பயிரிடக்கூடிய மேலும் பல வீரிய விதைகளை கரும்பு பயிர் நிறுவனம் கண்டுபிடித்தது. இதற்கு அமோக வரவேற்பு இருந்தது. இதன் அடுத்தகட்டமாக மித வெப்ப பருவநிலைக்கு ஏற்ற ரகம் 312 கண்டுபிடிக்கப்பட்டு 1928 மற்றும் 1933 ல் 419 ரக பயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

 

பிரதமர் திரு நரேந்திரமோடியின் மூன்றாண்டு கால ஆட்சியில் வட இந்திய மாநிலங்களில் 0238 ரக பயிர் விளைச்சல் விரிவாக்கப்பட்டு கரும்பு உற்பத்தியிலும், பிழிதிறனிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது.  கடந்த கரும்பு பருவ காலத்தில் உத்தரப்பிரதேசத்தில் 36 சதவீத பரப்பிலும், பஞ்சாபில் 63 சதவீத பரப்பிலும் ஹரியானாவில் 39 சதவீத பரப்பிலும், உத்ரகாண்ட் 17 சதவீத பரப்பிலும் பீஹாரில் 16 சதவீத பரப்பிலும் இந்த 0238 ரகம் பயிரிடப்பட்டது.  வடஇந்தியாவில் 0238 ரகமும் 0118 ரகமும் சர்க்கரை ஆலைகளின் முதல் தேர்வாக இருந்தது.  0238 ரக விளைச்சல் மூலம் கரும்பு விவசாயிகள் அதிகபட்ச சாகுபடி பெறுவதுடன் சர்க்கரை ஆலைகளும் அதிகமான சர்க்கரை உற்பத்தி செய்கின்றன.  இத்தகைய ஊடு பயிர் தொழில் நுட்பம் மூலமாகவும், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய் போன்றவற்றை கரும்புடன் ஊடுபயிராக விளைவித்து அதிக லாபம் பெற முடியும். 

 

சர்க்கரை ஆராய்ச்சி மையத்தின் 100 ஆண்டு சாதனை கொண்டாட்டத்தில் கலந்து கொள்வது மட்டுமே தமது வருகையின் நோக்கமல்ல என்றும் ஆகஸ்ட் 9-ல் கொண்டாடப்படவுள்ள வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75 ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்பதும் தமது வருகையின் நோக்கம் என்று அமைச்சர் கூறினார்.  1942 ஆகஸ்ட் 9 ஆம் தேதி, தியாகத்தையும் தவத்தையும் துணிச்சலையும் மட்டுமே ஆயுதமாக கொண்டு காட்டுமிராண்டித்தனமான பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியாவை விடுவிப்பது என்று இளைஞர்கள் சபதம் எடுத்ததையும், அதன் விளைவாக 1947 ல் நாடு விடுதலை பெற்றதையும் அமைச்சர் நினைவுகூர்ந்தார். 1942 முதல் 47 ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை நாட்டின் சுதந்திரத்திற்காக நடந்த வீரமிகு இயக்கம்தான் விடுதலையை பெற்றுத்தந்தது என்றும், அந்த இயக்கம்தான் இன்று சங்கல் சே சித்தி என்று நினைவு கூரப்படுகிறது என்றும் கூறினார்.

 

உரையின் நிறைவுப்பகுதியில், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75 ஆவது ஆண்டை கொண்டாடும் சுதந்திர தினத்தில் 2022 ஆம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை படைக்க நாம் உறுதியேற்போம் என்று அமைச்சர் அழைப்பு விடுத்தார். 


 

 

 

********



(Release ID: 1501279) Visitor Counter : 233


Read this release in: English