பிரதமர் அலுவலகம்

பிரதமரின் சீனா மற்றும் மியான்மர் பயணம் (செப்டம்பர் 3-7, 2017)

Posted On: 29 AUG 2017 1:36PM by PIB Chennai

மக்கள் சீனத்தின் அதிபர் அழைப்பின் பேரில் சீனாவின் ஃபியூஜியான் மாகாணம் ஜியாமின் நகரில் செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடைபெறும் 9-ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி செல்லவிருக்கிறார்.

இதையடுத்து, மியான்மர் குடியரசின் அதிபர் ஹெச் ஈ யூ டின் க்யா அழைப்பின் பேரில் செப்டம்பர் 5 முதல் 7 வரை மியான்மர் செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடி இதுவே முதல் முறையாகும். மியான்மரில் அந்த நாட்டின் பிரதமர் பதவிக்கு சமமான கவுன்சிலர் பதவியில் உள்ள டா ஆங் சான் சூ கி-யுடன் பரஸ்பர பேச்சு நடத்துகிறார். அந்த நாட்டின் அதிபர் யூ டின் க்யா-வையும் சந்தித்துப் பேசுகிறார். தலைநகர் நே பி தா-வில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன் யாங்கான் மற்றும் பகான் நகரங்களுக்கு செல்லவுள்ளார்.
 

***



(Release ID: 1501087) Visitor Counter : 118


Read this release in: English