பிரதமர் அலுவலகம்

ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரு. மிரோஸ்லேவ் லஜ்கக் பிரதமரை சந்தித்தார்

Posted On: 28 AUG 2017 4:04PM by PIB Chennai

ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவரும், ஸ்லோவ்க் குடியரசின் வெளியுறவு மற்றும் ஐரோப்பிய விவகாரங்கள் துறையின் அமைச்சருமான திரு. மிரோஸ்லேவ் லஜ்கக் பிரதமர் திரு. நரேந்திர மோடியை புது தில்லியில் இன்று சந்தித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது தலைவர் பதவிக்கு தேர்வாகியுள்ள திரு. மிரோஸ்லேவ் லஜ்கக்குக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். வரும் 72ஆவது ஐ நா பொதுச் சபையின் முன்னுரிமைகளை திரு. லஜ்கக் பிரதமரிடம் பகிர்ந்து கொண்டார். அவரது புதிய பொறுப்புகளை நிறைவேற்ற இந்தியா முழுமையான, ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை அளிக்கும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி உறுதியளித்தார்.

பயங்கரவாதம், ஐ நா சீர்திருத்தம், நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகளை செயல்படுத்துவது, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட முக்கியமான உலக சவால்களில் ஐ நா-வின் வலிமையான நடவடிக்கையின் அவசியம் குறித்து அவர்கள் இருவரும் விவாதித்தனர்.
 

***



(Release ID: 1501078) Visitor Counter : 90


Read this release in: English