பிரதமர் அலுவலகம்
ஜன் தன் யோஜனா 3ஆவது ஆண்டு நிறைவு: பயனாளிகளுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
28 AUG 2017 9:41AM by PIB Chennai
வரலாற்று சிறப்பு மிக்க மக்கள் நிதித் திட்டமான ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூன்றாண்டு நிறைவை ஒட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி, அனைத்து பயனாளிகளுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“இன்று, ஜன் தன் யோஜனா திட்டம் துவங்கி மூன்றாண்டு நிறைவு பெறுகிறது. இந்தத் திட்டத்தினால் பயனடைந்த கோடிக்கணக்கானவர்கள், குறிப்பாக ஏழை மக்களுக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜன் தன் யோஜனா புரட்சி, அடித்தட்டு மற்றும் விளிம்பு நிலையில் இருக்கும் ஏழை மக்களை நிதிசார்ந்த மைய நீரோட்டத்தில் இணைத்த வரலாற்று சிறப்பு மிக்க இயக்கமாகும்.
ஜன் தன் யோஜனா, சமூக பாதுகாப்பு திட்டங்கள் முத்ரா, ஸ்டாண்ட்-அப் இந்தியா ஆகியவை வாயிலாக லட்சக்கணக்கானோரின் விருப்பங்கள் ஈடேற சிறகுகள் அளித்திருக்கிறோம்.
ஏழை மற்றும் விளிம்பு நிலையிலுள்ள மக்களின் வாழ்க்கையில் தரமான மற்றும் தன்மையான மாற்றங்களை கொண்டு வரும் எமது முயற்சிகளை அதிக வீரியத்துடன் தொடருவோம்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
(रिलीज़ आईडी: 1501076)
आगंतुक पटल : 102
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English