பிரதமர் அலுவலகம்
கூடுதல் செயலாளர்கள் மற்றும் இணை செயலாளர்களுடன் பிரதமர் இரண்டாவது கலந்துரையாடல்
Posted On:
25 AUG 2017 11:52AM by PIB Chennai
இந்திய அரசில் பணிபுரியும் 80க்கும் மேற்பட்ட கூடுதல் செயலாளர்கள் மற்றும் இணை செயலாளர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி வியாழக்கிழமையன்று கலந்துரையாடினார். திட்டமிடப்பட்டுள்ள 5 கலந்துரையாடல்களில் இது இரண்டாவது கலந்துரையாடல்.
இந்த கலந்துரையாடலின் போது, அதிகாரிகள், நிர்வாகம், நிர்வாகத்தில் புத்தாக்கம், கழிவு மேலாண்மை, ஆறு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுதல், வனவியல், துப்புரவு, பருவநிலை மாற்றம், வேளாண்மை, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் மதிப்பு கூட்டல், போன்றவற்றில் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
அதிகாரிகள் தெரிவித்த கருத்துகளை கேட்ட பிரதமர் பதிலளிக்கையில், அதிகாரிகள் கோப்புகளுக்குள் தங்களை கட்டுப்படுத்திக்கொள்ளாமல், களத்திற்கு செல்ல வேண்டும் , அப்போது தான் முடிவு எடுப்பதின் உண்மையான விளைவுகளை புரிந்து கொள்ள முடியும் என்றார். குஜராத்தில் 2001ஆம் ஆண்டு நில நடுக்கத்திற்கு பிந்தைய புனரைப்பு பணிகளில் அதிகாரிகளின் அனுபவங்களை அவர் நினைவு கூர்ந்தார்.
அதிகாரிகள் தங்கள் பணிகளை வெறும் கடமையாக பார்க்கக்கூடாது என்ற பிரதமர், நாட்டை நிர்வகிப்பதில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாக கருத வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நிர்வாக நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்காக தொழில்நுட்பக் குறுக்கீடுகளை பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். இந்தியாவின் மிகவும் பின் தங்கிய 100 மாவட்டங்களின் மீது அவர்கள் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும் என்றும், அதன் மூலம் இந்த மாவட்டங்களை பல்வேறு வளர்ச்சி அளவுகளில் தேசிய சராசரி மட்டத்திற்கு கொண்டு வர முடியும் என்றார்.
(Release ID: 1501062)
Visitor Counter : 89