விவசாயத்துறை அமைச்சகம்

விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் 2017-18 ஆண்டு முதல் காலாண்டுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.16094.13 கோடி.

Posted On: 03 AUG 2017 6:06PM by PIB Chennai

இந்திய விவசாயம் மற்றும் அதன் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளின் முழுமையான வளர்ச்சிக்கு விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் இடையறாது உதவி வருகிறது. விவசாயிகளின் வருமானம் 2022-ம் ஆண்டு இரண்டு மடங்காக உயரவேண்டும் என்ற லட்சியத்தை அடைவதற்காக, இந்த அமைச்சகம் 2017-18 நிதியாண்டில் ரூ.62,125.02 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது 2016-17 ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.44,721.84 கோடியைவிட 39% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 2017 வரை முடிவடைந்த முதல் காலாண்டில், ரூ.16094.13 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதுவே 2016 ஜூன் மாதம் முடிவடைந்த காலாண்டில் ரூ.10498.90 கோடியாக மட்டுமே இருந்தது. இதனை கணக்கிடும்போது 53% தொகை அதிகரித்து வழங்கப்பட்டது தெரியவரும்.

 

எண்

 

திட்டத்தின் பெயர்

செலவு

ஜூன் 2016-17 வரை

செலவு

ஜூன் 2017-18

வரை

%

கூடுதல்

1.

பிரதான் மந்திரி ஃபாஸல் பீமா யோஜனா

2899.59

4664.88

60

2

ஆர்.கே.வி.ஒய்.

644.16

967.89

50

3.

பசுமை புரட்சி

கிருஷ்ணோநதி யோஜனா

(எம்..டி.ஹச்)

449.64

851.29

90

4.

என்.எஃப்.எஸ்.எம்.

222.93

333.57

50

5.

விவசாயம் - இயந்திரமாக்கல்

114.81

416.27

262

6.

ராஷ்ட்ரிய கோகுல் மிஷன்

0.00

36.00

3600

7.

நேஷனல் டயரி பிளான் நிலை- 1

100

200

100

8.

நேஷனல் புரோகிராம் ஃபார் டயரி டெவலப்மென்ட்

6.95

89.01

1180

9

நீலப்புரட்சி

16.91

100.64

495

இந்த தகவல்களில் இருந்து நாட்டின் விவசாயம் மற்றும் விவசாயிகள் முன்னேற்றத்துக்கு அமைச்சரவை கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதை காணமுடியும்.

SS

(Release ID :169574)



(Release ID: 1500841) Visitor Counter : 117


Read this release in: English