குடியரசுத் தலைவர் செயலகம்

சுற்றுசூழல் மற்றும் வன உயிரிகளை பாதுகாப்பதில் இந்திய வனப்பணி அலுவலர்கள் முக்கிய பங்காற்றுகிறார்கள் ஜனாதிபதி பாராட்டு.

Posted On: 03 AUG 2017 2:43PM by PIB Chennai

டேராடூனில் உள்ள இந்திராகாந்தி தேசிய வனக் கல்லூரியில் இந்திய வனப் பணி பயிற்சி முடித்த 89 பயிற்சியாளர்கள் (2016 தொகுப்பு)  குடியரசு தலைவர் திரு. ராம் நாத் கோவிந்தை குடியரசு தலைவர் மாளிகையில் சந்தித்தனர்.

வனப்பணி அலுவலர்களிடம் உரையாடிய ஜனாதிபதி, அவர்கள் மிக உன்னதமான ஒரு துறையை தேர்வு செய்திருப்பதாகக் கூறினார்.  இந்தியாவின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் வனம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் காட்டில் இருந்து பெறப்பட்ட அறிவுசார் ஆன்மிகத்தின் மூலம் நமது நாகரிகம் கட்டி எழுப்பப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

காடுகள் வளத்திற்கான ஆதாரமாக மட்டும் இல்லாமல், கலாச்சாரம், ஆன்மிகம் மற்றும் அறிவார்ந்த பாரம்பரியத்தை உள்ளடக்கி உள்ள இந்தப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு வனப்பணி அலுவலர்களிடம்தான் இருக்கிறது. நாட்டுக்குத் தேவையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்குத் தேவையான முன்னேற்ற நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் குடியரசு தலைவர் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.  

குடியரசு தலைவர் மேலும் பேசுகையில், ”கடந்த சில பத்தாண்டுகளில்தான் சுற்றுச்சூழல் சீரழிவினால் மனிதகுலம் உயிர் வாழ்வதற்கான அச்சம் குறித்தும், காடுகளின் அடர்த்தி குறைவதால் பருவநிலை மாற்றம் அடைந்து உலகம் வெப்பமயமாதல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சிக்கலான பருவநிலை மாற்றப் பிரச்சனைகளை கையாள்வதில் இந்தியா உலகத் தலைவராக உருவெடுத்துள்ளது. நமது நிப்பரப்பில் 33 சதவிகிதம் காடுகளாக இருக்கவேண்டும் என்று இந்திய வனக்கொள்கை வரையறுக்கப்பட்டுள்ளது. இந்திய வனப்பணி அலுவலர்கள் இயற்கை காடுகளை மேம்படுத்துவது மட்டுமின்றி வனமற்ற பகுதிகளிலும் மரங்கள் வளர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும், நாட்டின் படை வீரர்கள் போன்று சுற்றுச்சூழல் மற்றும் வன உயிர்களை பாதுகாக்கும் பணியில் நீங்கள் இணைந்துள்ளீர்கள். நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பயன் அளிக்கும் வகையில் அச்சமின்றி, நேர்மையாகவும், திறமையாகவும் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

விரைந்த பொருளாதார வளர்ச்சி அடையும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்வதால், எதற்கும் வளைந்துகொடுக்காத இலக்கை நோக்கி பணியாற்ற வேண்டும் என்றும், வனப்பணி அலுவலர்கள் நாட்டின் வளர்ச்சிக்கும் வனங்கள் பாதுகாப்புக்கும் சமமான முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் குடியரசு தலைவர் கேட்டுக்கொண்டார். வனப்பணி அலுவலர்களின் பணி பிரச்னைகளை நோக்கியதாக இல்லாமல் தீர்வை நோக்கி இருக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.


 



(Release ID: 1500838) Visitor Counter : 220


Read this release in: English