மத்திய அமைச்சரவை

மாற்று செயல்முறை வாயிலாக பொதுத்துறை வங்கிகளை ஒன்றுபடுத்த மத்திய அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல்

प्रविष्टि तिथि: 23 AUG 2017 5:22PM by PIB Chennai

மாற்று செயல்முறை அமைப்பு வாயிலாக பொதுத்துறை வங்கிகளை ஒன்றுபடுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தீர்மானம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ஒருங்கிணைப்புக்கு இடையே வலுவான, போட்டியிடும் வங்கிகளை உருவாக்க, வழிவகுக்கும்.

முக்கிய கூறுகள்:

பொதுத்துறை வங்கிகள் ஒருங்கிணைப்புக்கான ஒப்புதல் வடிவமைப்பின் முக்கிய கூறுகளாவன:

வலுவான, போட்டியிடும் வங்கிகள் குறித்தான இந்த தீர்மானம், முழுக்க முழுக்க வர்த்தகப் பரிசீலனைகளின் அடிப்படையிலானது.

இந்தத் திட்டமுன்வடிவு வங்கிகள் வாரியங்களிடமிருந்து துவங்க வேண்டும்.

ஒன்றிணைப்பை ஒட்டி, கொள்கை அளவிலான ஒப்புதலுக்காக வங்கிகளிடமிருந்து பெறப்படும் திட்டங்களை மாற்றுச் செயல் முறை அமைப்பின் முன் வைக்க வேண்டும்.
 


(रिलीज़ आईडी: 1500537) आगंतुक पटल : 157
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English