மத்திய அமைச்சரவை

தில்லியில் மத்திய பிரதேச விருந்தினர் மாளிகை கட்ட நிலம் ஒதுக்கீடுக்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 23 AUG 2017 3:57PM by PIB Chennai

மத்திய பிரதேச அரசு தில்லியில்  தனது விருந்தினர் மாளிகையை கட்டிக்கொள்வதற்கு புதிதில்லி சாணக்கியபுரி, ஜீசஸ் அண்ட் மேரி மார்க் – டாக்டர் ராதாகிருஷ்ணன் மார்க் சந்திப்பில் உள்ள  1.478 ஏக்கர் அல்லது 5882.96  சதுர மீட்டர் பரப்பிலான பிளாட் எண் 29சி மற்றும் 29டி மனைகளை தற்போதைய மதிப்பில் கீழ்க்காணும் நிபந்தனைகளுடன் ஒதுக்கீடு செய்ய பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

(i) ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தில் விருந்தினர் மாளிகை கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பின்னர் மத்திய பிரதேச அரசு, புதுதில்லி, சாணக்கியபுரி 2, கோபிநாத் பார்டோலாய் மார்கில் 0.89 ஏக்கர் பரப்பிலான நிலத்தை L&DO/MoHUAவிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும்.


(ii)  இரு நிலங்களும் ஒரே விலை உள்ள மண்டலத்தில் இருப்பதால் மத்திய பிரதேச அரசு 0.59 ஏக்கர் பரப்பிற்கான வித்தியாசத்திற்கான தொகையை தற்போதைய அரசு அளிக்க வேண்டும்.

(iii) மத்திய பிரதேச அரசு தற்போது தன் வசம் உள்ள 0.89 ஏக்கர் நிலத்திற்கு தற்போதைய விலை அடிப்படையில் L&DO/MoHUAவிடம் அந்த நிலத்திற்கான வாடகையை அளிக்க வேண்டும்.

மத்திய பிரதேச அரசு தனது விருந்தினர் மாளிகையை இன்றைய மற்றும் எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு நவீன வசதிகளுடன் கட்டுவதற்கு இந்த ஒதுக்கீடு உதவும்.
மாநில விருந்தினர் மாளிகை கட்டுவது தவிர வேறு எதற்கும் இந்த நிலத்தை மத்திய பிரதேச அரசு பயன்படுத்தாது. கட்டுமானத்தின் போது மத்திய அரசு தற்போதுள்ள விதிகள், மாஸ்டர் பிளான் உள்ளிட்டவற்றை மதிக்க வேண்டும்.

 

 

*****
 


(Release ID: 1500499) Visitor Counter : 130


Read this release in: English