மத்திய அமைச்சரவை

போதை மருந்துகள், உளநிலை மாற்றும் பொருட்கள் மற்றும் போதை மருந்து தயாரிக்கும் ரசாயணங்கள் மற்றும் அது தொடர்பான பொருட்களின் சட்டவிரோத கடத்தலைத் தடுக்க நேபாளத்துடன் போதை மருந்து கடத்தல் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 23 AUG 2017 4:14PM by PIB Chennai

 

போதை மருந்து, உள நிலையை மாற்றும் மருந்துகள், போதை மருந்து தயாரிக்கப் பயன்படும் ரசாயனங்கள் ஆகியவற்றின் கடத்தலைத் தடுக்க நேபாளத்துடன் போதை மருந்து தேவைக் குறைப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு புரிந்துணர்வு கையொப்பமிட பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போதை மருந்து தொடர்பானவற்றில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான அம்சங்களை பட்டியலிடுகிறது. தகவல் பரிமாற்றத்திற்கான வழிமுறை, இரு நாடுகளிலும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான மற்றும் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் இரு நாடுகளின் பொறுப்பு ஆணையங்களையும் இது அடையாளப்படுத்தி உள்ளது. போதை மருந்துகள் தொடர்பான விவகாரங்களில் ஒத்துழைப்பு போதை மருந்துகள், உளநிலை மாற்ற பொருட்கள் மற்றும் போதை மருந்து தயாரிக்கப் பயன்படும் ரசாயனங்கள் மற்றும் அது தொடர்பான பொருட்களின் சட்ட விரோத நடமாட்டத்தை தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பந்தப்பட்டவர்களின் விருப்பங்களும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளது:

(i) போதை மருந்துகள், உள நிலை மாற்றும் பொருட்கள், அவை தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் சட்டவிரோத கடத்தலுக்கு தீர்வு காண பரஸ்பர ஒத்துழைப்பை உருவாக்குவது, தடுப்பு மூலம் போதை மருந்து தேவையைக் குறைப்பதற்கு ஒத்துழைப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கல்வி மற்றும் சமூக அடிப்படையிலான நிகழ்ச்சிகள், சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மற்றும்

(ii) போதை மருந்து விவகாரங்களில் செயல்பாடு, தொழில்நுட்ப மற்றும் பொதுவான தகவல்கள் பரிமாற்றம், போதை மருந்துகள் சட்டவிரோத கடத்தலைத் தடுக்க உள்ள தற்போதைய சட்ட, விதிகள், நடைமுறைகள் சிறந்த நடைமுறைகள் மற்றும் முறைகளையும் தற்போதைய சட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களையும் பரிமாறிக்கொள்ளுதல்

பின்னணி

போதை மருந்து கடத்தலை தடுப்பதற்கான பல்வேறு பன்னாட்டு மற்றும் இருதரப்பு முயற்சிகளையும் ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகளையும் இந்தியா எப்போதும் ஆதரித்து வந்துள்ளது. போதை மருந்துகளுக்கு எதிரான ஐ.நா. மாநாட்டின் உணர்வுகளுக்கு ஏற்ப அண்டை நாடுகளுடன் மற்றும் நமது நாட்டில் உள்ள போதை மருந்து சூழலுடன் நேரடி தாக்கம் கொண்ட நாடுகளுடன் இருதரப்பு உடன்படிக்கைகள்/புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளோம். இத்தகைய இருதரப்பு ஒப்பந்தங்கள்/புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்டுள்ளன. நேபாளத்துடன் செய்து கொள்ளப்படும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமும் அத்தகையது என்பதுடன் போதை விவகாரத்தில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான நோக்கம் கொண்டதாகும்.

*****



(Release ID: 1500497) Visitor Counter : 166


Read this release in: English