மத்திய அமைச்சரவை
இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி.) உட்பிரிவு பற்றி ஆராய ஆணையம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
23 AUG 2017 3:58PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் அரசியல் சட்ட விதி 340ன் கீழ் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் உட் பிரிவுகள் விவகாரம் குறித்து ஆராய ஆணையம் ஒன்றை அமைக்கும் யோசனைக்கு ஒப்புதல் அளித்தது.
ஆணையத்தின் தலைவர் நியமிக்கப்படும் நாளில் இருந்து இந்த 12 வாரங்களில் ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆணையம் இதர பிற்படுத்தப்பட்டவர்களின் உட்பிரிவை ஆராயும் குழு என அறியப்படும்.
இந்த ஆணையத்தின் ஆய்வு வரம்புகள் வருமாறு:
(i) இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மத்திய பட்டியலில் இணைக்கப்பட்ட சாதிகள் / வகுப்புகள் இடையே இட ஒதுக்கீட்டின் பயன்களை சம அளவில் விநியோகிப்பது குறித்து ஆராயும்.
(ii) இத்தகைய இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் உட் பிரிவுகளுக்கான நுணுக்கம், வழிவகை, விதிகள் மற்றும் அளவீடுகளை உருவாக்குவது மற்றும்
(iii) சம்பந்தப்பட்ட சாதி/வகுப்புகள்/சார் சாதிகள்/இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் மையப் பட்டியலில் உள்ள பொருள் ஆகியவற்றை அடையாளம் காணும் பணியை மேற்கொள்வதுடன் அவற்றை சம்பந்தப்பட்ட உட் பிரிவுகளில் வகைப்படுத்துவது
16.11.1992 தேதியிட்ட wpc எண் 930/1990 (இந்திரா சாஹ்னி உள்ளிட்டவர்கள் எதிர இந்திய அரசு) வழக்கில் உச்சநீதிமன்றம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அரசு வகைப்படுத்த அரசியல் சட்ட அல்லது சட்ட்த் தடையேதும்ம் இல்லை என்றும், அரசு வகைப்படுத்த விரும்பினால் அதற்கு சட்டரீதியான தடை ஏதும் இல்லை என்றும் கூறியிருந்தது.
ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, புதுச்சேரி, கர்நாடகா, அரியானா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், பீகார், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய ஒன்பது மாநிலங்கள் ஏற்கனவே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உட்பிரிவு பகுப்புப் பணியை மேற்கொண்டுள்ளன.
****
(Release ID: 1500488)
Visitor Counter : 300