சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
திரு முக்தார்; அப்பாஸ் நக்வி மும்பையில் “ஜியோ பார்ஸி- விளம்பரம் - நிலை -2”-ஐ தொடங்கிவைத்தார்
Posted On:
29 JUL 2017 7:59PM by PIB Chennai
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சமுதாயத்தின் கடைசி மனிதனுக்கும் வளமான வாழ்வு பாதுகாப்பு மற்றும் கண்ணியமான வாழ்க்கையை உறுதிசெய்யும் வகையில் உள்ளார்ந்த வளர்ச்சி மற்றும் அந்தியோதயா ஆகியவற்றைச் செயல்படுத்தி வருகிறது என்று மத்திய சிறுபான்மையினர் நலன் மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு முக்தார்; அப்பாஸ் நக்வி இன்று இங்கு தெரிவித்தார்;.
மும்பையில் நடைபெற்ற “ஜியோ பார்ஸி- விளம்பரம் - நிலை -2”-க்கான இந்நிகழ்ச்சியில் பார்ஸி சமூகத்தைச்சேர்ந்த மிக அதிக அளவிலான மக்களும் மற்றும் பார்ஸி இன முக்கியப் பிரமுகர்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் திரு. நக்வி பேசுகையில் நாட்டின் பாரம்பரியப்பண்பாட்டை பேணுவதில் இந்நிகழ்ச்சி முன்மாதிரியாக உள்ளது என்றார். மேலும் இந்த தேசத்தைக்கட்டமைப்பதில் இந்தப் பார்ஸி இனம் மிகப்பெரிய மனிதர்களை உருவாக்கியதன் மூலம் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ளது என்றும்; அமைச்சர் தெரிவித்தார். இந்தியாவில் பார்ஸி இனம் மிகச்சிறிய சமூகம் எனினும், இது ஒரு முற்போக்கான சமூகம் என்பதில் ஐயமில்லை. கல்வியறிவினால் விழிப்புணர்வு அமைதி மற்றும் சமூக இணக்கம் போன்றவற்றிற்கு ஓர் உதாரணம் என்றார்.
இந்தியாவில் தொழிற்சாலைகள் முன்னேற்றத்தில் ஷாம் ஜெட்ஜி டாட்டா மிகப்பெரிய பங்களிப்பைத் தந்துள்ளார். இந்திய சுதந்திரப்போராட்டத்தில் தாதாபாய் நௌரோஜி,மேடம் பிகாஜி காமா போன்றோர் தங்கள் சிறந்த பங்களிப்பைத் தந்துள்ளனர். இந்திய அணுசக்தித் திட்டத்தின் தந்தை ஹோமி ஜே.பாபா, ஃபீல்டு மார்ஷல் ஷாம் மானெக்ஷா போன்றோர் தம் சேவையால் எப்போதும் நமது தேசத்தால் நினைவுகூரத்தக்கவர்கள். தொழிற்சாலை இராணுவ சேவை, சட்டம், மேலாண்மை மற்றும் பொது நிர்வாகம் போன்ற அனைத்துத் துறைகளிலும் பார்ஸி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் திறமைகளால் எப்போதும் நமது தேசத்தால் நினைவுகூரத்தக்கவர்கள் என்றார்.
இந்தியாவில் பார்ஸி இன மக்களின் சரிவு நிலையைப்போக்க 2013 ஆம் ஆண்டு ஜியோ பார்ஸி விளம்பரம் -நிலை 1 திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் விஞ்ஞான பூர்வ மற்றும் அமைப்பு ரீதியான நடவடிக்கைகள் மூலம் பார்ஸி இனத்தை மேம்படுத்துவதாகும். சிறுபான்மை இன மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான அமைச்சகத்தின் இரு கூறுகளைக் கொண்ட செயல் திட்டமாவது: மருத்துவ உதவி மற்றும் ஆலோசனை வழங்குதல் ஆகியன.
இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. ஜியோ பார்ஸி திட்டத்தின் மூலம் 101 குழந்தைகள் இந்த இனத்தில் பிறந்துள்ளன. முக்கியமாக ஜியோ பார;ஸி மூலம் உருவாக்கப்பட்டுள்ள பர்ஸார் பவுண்டேஷன் அரசுக்கும் பார்ஸி மக்களுக்குமிடையே ஓர் இணக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார். மேலும் மும்பையிலுள்ள டாட்டா சமூக அறிவியல் நிறுவனம் மற்றும் பாம்பே பார்ஸி பஞ்சாயத்து மற்றும் சௌராஷ்டிரா அஞ்சுமன்ஸ் ஆப் இந்தியா போன்ற அமைப்புகளும் முக்கியப் பங்களிப்பை வழங்கியுள்ளன என்றார். இந்த அமைப்புகள் மக்களைச் சென்றடையக் கூடிய செயல் திட்டங்கள் மூலமாக விளம்பரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக கருத்தரங்குகள், பயிலரங்குகள்> பரப்புரை, துண்டுப் பிரசுரங்கள், பார்ஸி இதழ்கள்> பிற சட்டம் சார் செயல்பாடுகள் மற்றும் விழிப்புணர்வுப் பேரணிகள் போன்றவை இதில் செயல்பட்டு வருகின்றன.
(Release ID: 1500093)
Visitor Counter : 93