மத்திய அமைச்சரவை

இடைநிலைக் கல்வி மற்றும் மேனிலைக் கல்விக்கான மேல்வரி வருவாய் மூலம் கிடைத்த நிதியில் இருந்து நிதிச் சட்டம் 2007-ன் 136வது பிரிவின் கீழ் காலாவதியாகாத ஒற்றை தொகுப்பு நிதி உருவாக்க அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 16 AUG 2017 4:17AM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ``மத்யமிக் மற்றும் உச்தார் சிக்சா கோஷ்'' (MUSK) என்று அழைக்கப்படும் , இடைநிலைக் கல்வி மற்றும் மேநிலைக் கல்விக்கான பொது கணக்கு தொகுப்பில் ஒரு காலாவதியாகாத நிதியை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.  ``இடைநிலைக் கல்வி மற்றும் மேனிலைக் கல்விக்கான மேல்வரி' வசூல் மூலம் கிடைக்கும் அனைத்து தொகையும் இதில் செலுத்தப்படும்.

     இந்த நிதியத்தின் (MUSK) மூலம் கிடைக்கும் நிதி, கல்வித் துறையின் திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படும். நாடு முழுக்க உள்ள இடைநிலைக் கல்வி மற்றும் மேநிலைக் கல்வி பயிலும் மாணவர்களின் நலனுக்கு இந்த நிதி கிடைக்கும்.

     மேற்குறிப்பிட்ட நிதி தொடர்பாக, மத்திய அமைச்சரவை பின்வரும் அம்சங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது :

 

(i)      மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் மேற்படி தொகுப்பின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செய்யப்படும்.

(ii)     மேல்வரியில் சேர்ந்து வரும் நிதி, தற்போது அமலில் உள்ள இடைநிலை மற்றும் மேனிலைக் கல்வித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும். இருந்தபோதிலும், தேவையின் அடிப்படையில், வரையறுக்கப்பட்ட வழிமுறைகளின்படி, இடைநிலைக் கல்வி மற்றும் மேனிலைக் கல்வியில் எந்த எதிர்காலத் திட்டத்துக்கும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நிதி ஒதுக்கலாம்.

(iii)    எந்த நிதியாண்டிலும், பள்ளிக் கல்வி & எழுத்தறிவு மற்றும் மேனிலைக் கல்வித் துறையில் அமலில் உள்ள திட்டங்களுக்கான செலவினங்களுக்கு ஆரம்பத்தில் ஒட்டுமொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில் (GBS) இருந்து பெறப்படும். அந்த நிதி காலியான பிறகு மட்டுமே MUSK-ல் இருந்து செலவினத்துக்கு நிதி அளிக்கப்படும்.

(iv)    இந்திய பொது கணக்குகளில் வட்டி ஈட்டாத பிரிவின் கீழ் காத்திருப்பு நிதியாக MUSK பராமரிக்கப்படும்.

 

 நிதியாண்டின் இறுதியில் நிதி காலாவதியாகாமல் இருப்பது உறுதி செய்யப்படுவதுடன், இடைநிலைக் கல்வி மற்றும் மேனிலைக் கல்விக்கு போதிய ஆதாரவளங்கள் கிடைப்பதை மேம்படுத்துவது இதில் பெரிய ஆதாயமாக இருக்கும்.

 

அம்சங்கள் :

 

  1. உத்தேசிக்கப்பட்டுள்ள காலாவதியாகாத நிதியில் சேரக்கூடிய தொகை, இடைநிலைக் கல்வி கல்வி மற்றும் உயர்கல்வி வசதிகளை விரிவாக்கம் செய்வதற்கு கிடைக்கும்.

 

  1. இடைநிலைக் கல்விக்கு : இப்போது, மேல்வரியின் மூலம் கிடைக்கும் தொகையை இடைநிலைக் கல்வியில் பின்வரும் வகையில் பயன்படுத்தலாம் என மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது :

 

  • அமலில் உள்ள ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான் திட்டம் மற்றும், அங்கீகரிக்கப்பட்ட பின்வருவன உள்ளிட்ட திட்டங்கள்:
  • தேசிய வழிவகை-மற்றும்-மதிப்பெண் உதவித் தொகை திட்டம் மற்றும்
  • இடைநிலைக் கல்வி பயிலும் மாணவியருக்கான தேசிய ஊக்கத் தொகை திட்டம்.

 

  1. மேனிலைக் கல்விக்கு: இதில் சேரும் தொகை பின்வருவனவற்றுக்கு பயன்படுத்தப்படும்:

   

  • அமலில் உள்ள வட்டி மானியம் மற்றும் உத்தரவாத நிதிகளுக்கான பங்களிப்பு, கல்லூரிக்கான உதவித் தொகை & பல்கலைக்கழக மாணவர்கள்;
  • ராஷ்ட்ரிய உச்தார் சிக்சா அபியான்;
  • உதவித் தொகை (நிறுவனங்களுக்கு மொத்த மானியத்தில் இருந்து) மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பயிற்சிக்கான தேசிய திட்டம்.
  • இருந்தபோதிலும், தேவையின் அடிப்படையில், வரையறுக்கப்பட்ட வழிமுறைகளின்படி, இடைநிலைக் கல்வி மற்றும் மேனிலைக் கல்வியில் எந்த எதிர்காலத் திட்டத்துக்கும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நிதி ஒதுக்கலாம்..

 

இடைநிலைக் கல்வி மற்றும் உயர்கல்விக்குப் போதுமான ஆதாரவளங்கள் அளிக்க வேண்டும் என்ற தேவைக்காகத்தான் இடைநிலைக் கல்வி மற்றும் மேனிலைக் கல்விக்கான மேல்வரி வசூலிக்கப்படுகிறது.

 

பரம்பிக் சிக்சா கோஷ் (PSK) திட்டத்தின் கீழ் இப்போதுள்ள ஏற்பாடுகளின்படி இந்த நிதி செயல்படுத்தப்படும். இதில் மேல்வரி மூலம் கிடைக்கும் தொகை பள்ளிக் கல்வி & எழுத்தறிவுத் துறையின் சர்வ சிக்சா அபியான் (SSA) மற்றும் மதிய உணவு (MDM) திட்டங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

 

 பின்னணி:

 

(i)      10வது திட்ட காலத்தில் அனைத்து மத்திய வரிகளிலும் 2% கல்விக்கான மேல்வரி 1.4.2004-ல் இருந்து விதிக்கப்பட்டது. அடிப்படைக் கல்வி / தொடக்கக் கல்விக்கு தற்போதுள்ள பட்ஜெட் ஒதுக்கீடுகளை மேம்படுத்தி கூடுதல் ஆதார வளங்கள் ஏற்படுத்த இந்த மேல்வரி விதிக்கப்பட்டது.  இடைநிலைக் கல்வியை ஒரே மாதிரி தரத்தில் உருவாக்கவும், மேனிலைக் கல்வி கிடைக்கும்  வசதியை விரிவாக்கம் செய்யவும் மத்திய அரசுக்கு இதேபோன்ற ஒரு முயற்சி தேவை என  உணரப்பட்டது. எனவே, 2007ல் நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில், இடைநிலைக் கல்வி மற்றும் மேனிலைக் கல்விக்கு மத்திய வரிகள் மீது 1% மேல்வரி விதிப்பதாக அறிவித்தார்.

(ii)  ``இடைநிலைக் கல்வி மற்றும் மேனிலைக் கல்வி மேல்வரி'' என்று கூறப்படும் 1% மேல்வரி நிதிச் சட்டம் 2007-ன் மூலமாக  ``இடைநிலைக் கல்வி மற்றும் மேனிலைக் கல்விக்கு நிதி வசதி அளிக்கும் மத்திய அரசின் கடமையை நிறைவேற்றுவதற்காக'' (136வது பிரிவு) விதிக்கப்பட்டது.

(iii)  ஜூலை 2010-ல், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒரு வரைவு அமைச்சரவைக் குறிப்பை சுற்றுக்கு அனுப்பியது. ``மத்யமிக் மற்றும் உச்தார் சிக்சா கோஷ்'' (MUSK) என்று அழைக்கப்படும் , இடைநிலைக் கல்வி மற்றும் மேனிலைக் கல்விக்கான பொது கணக்கு தொகுப்பில் காலாவதியாகாத நிதியை உருவாக்குவது பற்றிய திட்டம் அதில் முன்வைக்கப்பட்டது. இதுகுறித்து தொடர்புடைய அமைச்சகங்களின், அதாவது அப்போதைய திட்டக் குழு, வடகிழக்கு மாகாண அமைச்சகம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான துறை, நிதி அமைச்சகம் ஆகியவற்றின் கருத்துகள் கேட்கப்பட்டது. இடைநிலைக் கல்வி கல்வி மற்றும் மேனிலைக் கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீடு, வசூலிக்கப்படும் 1% மேல்வரியைவிட அதிகமாக இருக்கிறது என்று கூறி இந்தத் திட்டத்துக்கு பொருளாதார விவகாரத் துறை ஒப்புதல் தெரிவிக்கவில்லை. எனவே, வசூலிக்கப்படும் மேல்வரி தொகை இடைநிலைக் கல்வி மற்றும் மேனிலைக் கல்விக்கு அந்தந்த நிதியாண்டில் முழுமையாக ஒதுக்கீடு செய்யப்படுவதாகக் கருதப்பட்டது. எனவே முந்தைய ஆண்டில் 1% மேல்வரியில் கிடைக்கும் நிதி இப்போது ஒதுக்கீட்டில் கிடைப்பதில்லை.

(iv) அதன் தொடர்ச்சியாக, ``மத்யமிக் மற்றும் உச்தார் சிக்சா கோஷ்'' (MUSK) உருவாக்குவதற்கு தொடர்பாக மறு ஆய்வு செய்ய பொருளாதார விவகாரத் துறையின் ஒப்புதலை 2016 பிப்ரவரி 11-ல் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கோரியது.  MUSK உருவாக்குவதற்கான ஒப்புதலைக் கோருவதற்கு வரைவு அமைச்சரவைக் குறிப்பை முன்வைக்க இந்த அமைச்சகத்துக்கு பொருளாதார விவகாரத் துறை 2016 ஜூன் 20-ல் ஒப்புதல் அளித்தது.

 

****


(Release ID: 1500034) Visitor Counter : 616
Read this release in: English