மத்திய அமைச்சரவை

ஆயுதப் படை தலைமையக சிவில் சேவைகளில் 7 முதன்மை இயக்குனர் பதவிகள் மற்றும் 36இயக்குனர் பணியிடங்களை வழக்கமான முறையில் உருவாக்க அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 16 AUG 2017 4:19PM by PIB Chennai

பாதுகாப்பு அமைச்சகத்தின் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக ஆயுதப் படை தலைமையக சிவில் சேவைகளில் 7 முதன்மை இயக்குனர் பணியிடங்கள் மற்றும் 36 இயக்குனர் பணியிடங்களை வழக்கமான முறையில் உருவாக்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆயுதப்படை தலைமையகத்தில் வழக்கமான பணியிடங்கள் உருவாக்கப்படுவது பணிநிலை தேக்கத்தைப் போக்கும். சிறந்த பணிநிலை நிர்வாகம் மற்றும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் இது மேற்கொள்ளப்படுகிறது. இது கூடுதல் செலவு இன்றி புதுமையான நடவடிக்கையாக இருக்கும் என்ற போதிலும் பணி நிலை நிர்வாக கண்ணோட்டத்தில் சிறந்த பயன்பாட்டை அளிக்கும்.

பதவி உயர்வுகளுக்கு பதிலாக வழக்கமான பணியிடங்கள் உருவாக்கப்படுவது பணிநிலை நிர்வாகத்தில் அதிக வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும். வழக்கமான பணியிடங்களில் கூடுதல் பொறுப்புக்களை அளிப்பது, அதிக உற்பத்தித்திறனையும் நம்பகத்தன்மையையும் ஆயுதப் படை தலைமையக சிவில் சேவை அதிகாரிகளிடையே அளிக்கும்.
 


(रिलीज़ आईडी: 1499951) आगंतुक पटल : 134
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English