மத்திய அமைச்சரவை
நீண்டகால நீர்ப்பாசன நிதியத்துக்காக 2017&18ல் ரூ.9,020 கோடி வரையில் கூடுதல் பட்ஜெட் ஆதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காக மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளது
Posted On:
16 AUG 2017 4:24PM by PIB Chennai
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 2017&18ல் நபார்டு வங்கி, கடன் பத்திரங்கள் மூலம் ரூ.9,020 கோடி கூடுதல் பட்ஜெட் ஆதாரத்தை (இ.பி.ஆர்.) திரட்டிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடன்களுக்கு ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தை உறுதி செய்து திரட்டப்படும் இந்த நிதி மூலம், தற்போது முன்னுரிமை கொடுத்து செய்யப்பட்டு வரும் 99 விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன நன்மைகள் திட்டங்கள் (ஏஐபிபீ) அமல்படுத்தப்படும். மேலும், இத்துடன் பி.எம்.கே.எஸ்.ஒய். திட்டத்தின் கீழான கட்டளைப்பகுதி மேம்பாடு பணிகளும் நிறைவேற்றப்படும்.
விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன நன்மைகள் திட்டத்தின் கீழ் (ஏஐபிபீ) மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான முக்கியமான மற்றும் நடுத்தர அளவிலான நீர்ப்பாசன திட்டங்களுக்கு போதுமான அளவு நிதி ஒதுக்கப்படாததால் அவை செயலிழந்து கிடக்கின்றன. கடந்த 2016&17 நிதியாண்டில், தற்போது பி.எம்.கே.எஸ்.ஒய். & ஏஐபிபீ திட்டத்தின் கீழ் நடந்து வரும் 99 திட்டங்கள், 2019ம் ஆண்டு டிசம்பருக்குள் படிப்படியாக முடிக்கப்பட்டுவிடும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை முடிப்பதை உறுதி செய்யவும், தேவைப்படும் பெரிய அளவிலான நிதி தேவையை நிறைவேற்றவும், மத்திய நிதியமைச்சர், 2016&17 நிதிநிலை அறிக்கை வாசிக்கும்போது, ரூ.20,000 கோடி தொடக்க நிதியுடன் நபார்டில் பிரத்யேகமான நீண்டகால நீர்ப்பாசன நிதியம் (எல்.டி.ஐ.எப்.) ஏற்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். இதன் மூலம் பி.எம்.கே.எஸ்.ஒய். (ஏ.ஐ.பி.பீ. மற்றும் சிஏடி) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அடையாளம் காணப்பட்ட திட்டங்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்கு வழங்கப்படும்.
நபார்டு மூலமான இந்த கடன்களில், மாநிலங்களை ஈர்க்க, வட்டி விகிதத்தை 6 சதவீதத்தையொட்டி வைத்திருப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2016&17 முதல் 2019&20 வரையிலான காலத்தில் ஆண்டுதோறும் நபார்டுக்கு தேவையான அளவுக்கு கூடுதல் செலவின்றி நிதி வழங்கவும், இதற்கான வட்டி செலவினத்தை மத்திய அரசு ஏற்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2016&17ல், எல்.டி.ஐ.எப்.பின் கீழ் நபார்டு வங்கி ஒட்டுமொத்தமாக ரூ.9,086.02 கோடியை அளித்துள்ளது. இதில் பொலவரம் திட்டத்துக்காக மட்டும் (இ.பி.ஆர். பங்களிப்பு இல்லாமல்) ரூ.2,414.16 கோடி அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.6,671.86 கோடி, இ.பி.ஆர். பயன்பாட்டு அடிப்படையிலான திட்டங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.924.9 கோடி மத்திய உதவியாக (சிஏ), பட்ஜெட் பிரிவின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016&17ல் ஒட்டுமொத்தமாக ரூ.2187 கோடியை, முழுமையான மத்திய அரசின் சேவை பாண்டுகளான இ.பி.ஆர். அடிப்படையில் நபார்டு வங்கி திரட்டி உள்ளது.
2017&18ம் நிதியாண்டில், எல்.டி.ஐ.எப்.பின் மூலம் ரூ.29,000 கோடி நிதி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் இ.பி.ஆர். மூலம் ரூ.9,020 கோடி தேவைப்படுகிறது.
பல்வேறு சீராய்வு கூட்டங்களின் ஆலோசனைகளின் அடிப்படையில், மத்திய மற்றும் மாநில நீர்வள ஆணையங்கள் அளித்த பரிந்துரையின்கீழ் 18 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன அல்லது முடியும் தறுவாயில் உள்ளன. 2016&17ல் 99 திட்டங்கள் மூலம் சொட்டுநீர்ப்பாசன ஆதாரத்தை 14 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயன்படுத்திக் கொள்ளப்படும். 2017&18ல் மேலும், 33 திட்டங்கள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடையாளம் காணப்பட்ட சொட்டுநீர்ப்பாசன திட்டங்கள் முடிவடையும்போது, உடனடியாக சிறப்பான அளவில் வேலைவாய்ப்புகளையும், உப வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். முக்கியமாக இந்த திட்டங்கள் முடிக்கப்படும்போது, 76 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு சொட்டுநீர்ப்பாசன ஆதாரத்தை பெறும். அதன் மூலம் இந்த பிராந்தியத்தில் விவசாயத்துறையில் காட்சிகள் மாறும். அறுவடை பெருகுவதால், பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் உருவாதுடன், அறுவடை முறைகளும் மாறும். விவசாய பொருட்கள் பதனிடுதல் மற்றும் பிற உப தொழில்வாய்ப்புகளும் பெருகும்.
(Release ID: 1499949)
Visitor Counter : 151