நிதி அமைச்சகம்

வங்கியமைப்பில் கணினிக் குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கைகள்

Posted On: 01 AUG 2017 6:59PM by PIB Chennai

இந்திய ரிசர்வ் வங்கி அளித்த தகவலின் படி கிரெடிட் அட்டை, எ.டி.எம்., டெபிட் அட்டை, இன்டெர்நெட் வங்கி சேவை ஆகியவற்றில் கணினி குற்றங்கள் 4.4% அளவு உயர்வடைந்து 2014-2015ல் 13,083 ல் இருந்து 2016-2017ல் 13,653 என உயர்ந்துள்ளது தெரிய வருகிறது.

வங்கிகளுக்கான கணினிப் பாதுகாப்புக் கட்டமைப்பை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதன் படி கணினி பாதுகாப்புக் கொள்கையை வரைந்து நிர்வாக வாரியத்தின் ஒப்புதலைப் பெற்று வெளியிட வேண்டியது வங்கிகளுக்குக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்பில் கணினி அச்சுறுத்தல்கள், இவற்றால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் இடம் பெற்றிருக்க வேண்டும்.

மோசடியான கணக்குக் குறிப்புகள் அல்லது இதர பரிவர்த்தணைகளை சரிசெய்து திருத்தியமைத்தல், வாடிக்கையாளர் பாதுகாப்பை உறுதி, செய்யும் நிர்வாக வாரியம் ஒப்புதல் பெற்ற வங்கிக் கொள்கை, அனுமதி இல்லாத மின்னணு வங்கிப் பரிவர்த்தனைகளால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்தல், இவற்றை எல்லாம் வங்கியின் வலைதளத்தில் முழுவிவரத்துடன் வெளியிடுதல் ஆகியவை குறித்து வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுரை வழங்கியுள்ளது. வாடிக்கையாளர் வங்கியில் புகார் கொடுத்த ஒரு மாத காலத்திற்குள் பதில் ஏதும் வரவில்லை என்றாலும் அல்லது கிடைத்த பதிலில் அவர் திருப்தி அடையவில்லை என்றாலும் வங்கிகள் ஓம்புட்ஸ்மான் திட்டத்தின்படி ஓம்புட்ஸ்மானிடம் புகார் சமர்ப்பிர்க்களாம். இந்த புகாரில் உண்மை இருப்பதாக காணப்பட்டால் வங்கிகள் இழைத்த தவறுக்காக வாடிக்கையாளருக்கு இழப்பிடாக ரூ. 20 லட்சம் வரை வழங்குவதற்கும் வாடிக்கையாளர் அனுபவித்த இன்னல்கள், மனஉளைச்சல். ஆகியவற்றுக்கு ஈடாக ரூ. 1லட்சம் வரை வழங்குவதற்கும் ஓம்புட்ஸ்மானுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு. சந்தோஷ் குமார் கங்குவார் இன்று மாநிலங்களைவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். 

****

 


(Release ID: 1499594) Visitor Counter : 131


Read this release in: English