நிதி அமைச்சகம்
ஜி.எஸ்.டி தொடர்பான ஐயங்களை தெளிவுபடுத்துவதற்கு, அரசு, இரண்டு அழைப்பு மையங்களை அமைத்துள்ளது.
Posted On:
01 AUG 2017 7:13PM by PIB Chennai
ஜி.எஸ்.டி தொடர்பாக வரி செலுத்தவோர் மற்றும் அக்கறையுள்ள அனைவரது கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் மத்திய அரசு இரண்டு அழைப்பு மையங்களை உருவாக்கியுள்ளது.
- ஜி.எஸ்.டி செயலி மென்பொருள் தொடர்பான அழைப்பு மையம். இந்த மையத்தை மென்பொருளை ஜி.எஸ்.டி.என் இயக்குகிறது. இந்த அழைப்பு மையத்துக்கான தொலைபேசி எண்: 0120 4888999. இந்த மையத்துக்கான மின்னஞ்சல் முகவரி: helpdesk@gst.gov.in
- கலால், சுங்க வரி மத்திய வாரியம் – CBEC மித்ரா ஹெல்ப் டெஸ்க் என்ற அழைப்பு மையம் ஜி.எஸ்.டி.தொடர்பான அனைத்து வினாக்களுக்கும் பதிலளிக்கும். இந்த மையத்துடன் தொடர்புள்ள தொலைபேசி எண்: 1800-1200-232.இந்த மையத்தின் மின்னஞ்சல் முகவரி : cpecmitra.helpdesk@icegate.gov.in
வரி செலுத்துவோர் கேள்விகளுக்கு இந்த மையங்கள் பதிலளிக்கின்றன. இது தவிர நெறிமுறைகள் பற்றிய தகவல்கள் மற்றும் CBEC அவப்போது வழங்கும் FAQ க்களும் இவற்றில் இடம்பெற்றிருக்கும்
GSTN ஹெல்ப் டெஸ்க் ஐந்தாண்டு காலத்திற்க்கும் CBEC மித்ரா ஹெல்ப் டெஸ்க் 7 ஆண்டு காலத்திற்க்கும் செயல்படும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு. சந்தோஷ் குமார் கங்குவார் மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதை தெரிவித்தார்.
****
(Release ID: 1499593)
Visitor Counter : 101