நிதி அமைச்சகம்

விவசாயிகளின் கடன் சுமை பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சிறப்புத் திட்டங்கள்

Posted On: 01 AUG 2017 6:58PM by PIB Chennai

விவசாயிகளின் கடன் சுமையைக் குறைப்பதற்காக மத்திய அரசு கீழ்கண்ட நடவடிக்கைகளை வகுத்துள்ளது.

  • விவசாயிகளுக்கு 7 சதவீதம் என்ற குறைந்த வட்டிவீதத்தில் விவசாய கடன் கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசின் வேளாண்துறை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை குறுகிய கால பயிர்களுக்காக வரி குறைப்பு திட்டத்தின்படி 3 லட்சம் ரூபாய் வரை கடன் அனுமதிக்கிறது. இந்தத் திட்டத்தின்படி கடனை உரிய காலத்தில் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு கூடுதலாக 3 சதவீத வரிக்குறைப்பு வழங்கப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகளுக்கு வட்டிவீதம் 4 சதவீதமாகக் குறைகிறது. 
  • வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடன் வழங்கும் நிறுவனங்கள் வழங்க வேண்டிய நிவாரண நடவடிக்கைகள் குறித்து ரிசர்வ் வங்கி பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.  இதன்படி, பயனாளிகளை அடையாளம் காணுதல், புதிய கடன்களை வழங்குதல், ஏற்கனவே உள்ள கடன்களை சீரமைத்து வழங்குதல் குறைக்கப்பட்ட ஜாமீன் அளவு, கடன் நிபந்தனை கால மாற்றியமைப்பு போன்றவை இதில் அடங்கும். கடன்களை சீரமைக்கும் திட்டத்திற்கு, பயிர் இழப்பு வரம்பு 50 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.  தேசிய இயற்கைப் பேரிடர் மேலாண்மை கட்டமைப்பின் பரிந்துரைப்படி இது குறைக்கப்பட்டுள்ளது.  மேலும் ரிசர்வ் வங்கியின் முன்னுரிமைப் பிரிவு கடன் வழங்கும் நெறிமுறைகளின்படி, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிறுவனம் சாராத கடன்களை திரும்பச் செலுத்துவது முன்னுரிமை துறையின் கீழ் தகுதி பெறும் அம்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தவிர்க்க முடியாத இயற்கை பேரிடர் காரணமாக ஏற்படும் இழப்புகளைச் சரிகட்ட, பிரதமர் பயிர் பாதுகாப்புத் திட்டத்தின்படி, விரிவான காப்பீடும் வழங்கப்படுகிறது. இதன்படி எதிர்பாராத நிகழ்வுகளால் பயிர்ச்சேதம் ஏற்பட்டு தவிக்கும் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. விவசாயிகள் தொடர்ந்து விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருமானத்தை நிலைப்படுத்த வகை ஏற்படுகிறது.  புதுமையான, நவீன வேளாண் நடைமுறைகளை கடைபிடிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
  • வேளாண்மை மேம்பாட்டுக்கும், விவசாயிகளின் நலனுக்கும் மத்திய அரசின் வேளாண் துறையும், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறையும் பல்வேறு மத்திய நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
  1. தேசிய விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டம்
  2. தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம்
  3. தேசிய வேளாண் சந்தை வசதி
  4. நிலைத்த வேளாண்மைக்கான தேசிய இயக்கம்
  • பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு மத்திய அரசு விவசாயிகளின் நிவாரணத்துக்காக கூட்டுறவு துறையில் கீழ்கண்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
  1. கடன்களைத் திரும்பச் செலுத்த கூடுதலாக 60 நாள் கால அவகாசம், 1.11.2016 முதல் 31.12.2016 வரையிலான காலகட்டத்தில் கடன் திரும்பச் செலுத்த இறுதிநாள் இருக்கும் விவசாயிகளுக்கு வட்டிவீதம் 3 சதவீதம் குறைக்கப்படுகிறது.  அதேசமயம் அவர்கள் தங்கள் கடனை கெடு முடிவடைந்த 60 நாட்களுக்குள் திரும்பச் செலுத்த வேண்டும்.
  2. 2016 நவம்பர், டிசம்பர் இரண்டு மாதங்களுக்கு வட்டி தள்ளுபடி. இது கூட்டுறவு வங்கிகளில் 01.04.2016 முதல் 30.09.2016 வரை கடன் பெற்ற குறுகிய கால பயிர் விவசாயிகளுக்கு பொருந்தும். இந்தத் தொகை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும்.
  3. நபார்டு வங்கி வெளிச்சந்தையில் சந்தை வட்டிவீதத்தில் 17,880.78 கோடி ரூபாய் கடன் பெற்று அதனை கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு 4.5 சதவீத வட்டி வீதத்தில் கடன் வழங்குவதற்காக வழங்குகிறது.

இந்தத் தகவல்களை மத்திய நிதி, பாதுகாப்பு, கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. அருண்ஜேட்லி மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.  


(Release ID: 1499592) Visitor Counter : 1246


Read this release in: English