நிதி அமைச்சகம்
பேன் அட்டையுடன் ஆதார் இணைப்பதை கட்டாயமாக்குதல்
Posted On:
01 AUG 2017 7:11PM by PIB Chennai
நிரந்தர கணக்கு எண் பேன் என்பது வரி செலுத்துதலில் முக்கிய அடையாளம் காட்டும் குறியீடு மேலும் அது ஒரு நபர் தொடர்பான அனைத்து நிதி பரிவர்த்தனைகளின் தொகுப்பு ஆகும். ஒரு நபருக்கு ஒரு பேன் என்பதே வழிகாட்டும் கொள்கையாகும். எனினும், ஒரு நபருக்கு ஒரு பேன் என்பதன் தனித்தன்மையை பாதுகாப்பது அவசியமாகும். இந்தத் தனித்தன்மை இரட்டிப்பை தவிர்க்கும் சோதனைகள் மூலம் சாத்தியப்படுகிறது. ஏற்கனவே உள்ள பேன் எண்களுடன் புதிய மனுதாரர்கள் அளிக்கும் தகவல்களை சரிபார்ப்பதன் மூலமும் இது சாத்தியமாகும். தற்போதைய பேன் முறையின்படி மக்கள் தொகை தகவல் மட்டுமே அளிக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் ஒரே நபருக்கு பல பேன்கள் ஒதுக்கப்பட்டுள்ளதும் அல்லது ஒரே பேன் பல நபர்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆதார் எண்ணை பேன் தகவல் கட்டமைப்புடன் இணைப்பதன் மூலம் பேன் வழங்குவதில் உள்ள இரட்டிப்பு நடவடிக்கைகள் கட்டுப்படும். ஆதார் பயோ மெட்ரிக் அளவுகளை உள்ளடக்கியது என்பதால் இது சாத்தியமாகிறது. ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் வருமான வரித்துறை இரட்டிப்பு பேன் அட்டைகளை கண்டுபிடித்து அகற்ற முடியும். இதேபோல ஆதார் எண் இணைப்பு மூலம் ஒரு பேன் எண் பலருக்கு வழங்கப்பட்டிருக்கும் பிரச்சினைக்கும் தீர்வு ஏற்படும்.
27.07.2017 நிலவரப்படி, 11,44,211 பேன் அட்டைகள் அடையாளம் காணப்பட்டு அவற்றில் பல பேன்கள் ஒருநபருக்கு அளிக்கப்பட்டிருந்தால் அவை நீக்கப்பட்டுள்ளன. அதேபோல அன்றைய தேதியில் 1,566 பேன்கள் போலியானவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் பேன் அட்டை வழங்கும் நிறுவனங்கள் பேன் மனுக்களை நேரடியாக விசாரணை செய்து அதன் அறிக்கையை மதிப்பீட்டு அதிகாரிக்கு அனுப்பி வைக்கின்றன. இந்த அறிக்கை பெறப்பட்ட பின், மதிப்பீட்டு அதிகாரி தாமே விசாரணையை மேற்கொண்டு பேன் அட்டைகளை போலி என குறிப்பீடு செய்கிறார். ஒன்றுக்கு மேற்பட்ட பேன் ஒதுக்கீடுகள் பெறப்பட்டால், அவற்றை நீக்கிவிடும் அதிகாரம் மற்றும் செயல்முறை மென்பொருள் மதிப்பீட்டு அதிகாரியிடம் உள்ளது. மேலும் 2004 முதல் 2007 வரை இந்தத் துறையின் கீழ் போலி பேன்கள் குறித்து ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வினைத் தொடர்ந்து இத்தகைய பேன்கள் நீக்கப்பட்டுவிட்டன.
இந்தத் தகவல்களை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் திரு சந்தோஷ்குமார் கங்குவார் மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
(Release ID: 1499589)
Visitor Counter : 165