நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
போலி மினரல் தண்ணீர் பாட்டில்களை தடுப்பதற்கு மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்
Posted On:
01 AUG 2017 4:30PM by PIB Chennai
2011 ஆம் ஆண்டு உணவு, பாதுகாப்பு மற்றும் உணவு உற்பத்தி பொருட்கள், உணவு பொருளில் சேர்க்கப்படும் பொருட்கள், தரக்கட்டுபாடுகள் சட்டத்தின் துணை சட்டங்கள் 2.10.7 மற்றும் 2.10.8 ஆகியவற்றின்படி, சிப்பம் கட்டப்பட்ட மினரல் தண்ணீர் மற்றும் குடிநீர் (மினரல் தண்ணீர் அல்லாத) குறித்த தரகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள அனைத்து சிப்பம் கட்டப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்களும் இந்தத் தரங்களைக் கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உற்பத்தி பொருட்கள் இந்திய தர நிர்ணயித்தின் சான்றிதழ் பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சிப்பம் செய்யப்பட்ட தண்ணீர் உற்பத்தியாளர்கள் அனைவரும் இந்த நிபந்தனைகளைக் கடைபிடிக்க வேண்டும். எனினும், உரிமம் பெறாத பிரிவுகளும், வரையறுக்கப்பட்ட தரத்தில் இல்லாத பிரிவுகளும், சிப்பம் செய்யப்பட்ட தண்ணீரை விற்பனை செய்வது FSSAI அமைப்பின் கவனத்திற்கு வந்துள்ளது. எனவே FSSAI, இந்த விஷயம் குறித்து அவ்வபோது மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் உணவு பாதுகாப்பு ஆணையர்களுக்கு தகவல் தெரிவித்து, இந்த விஷயத்தில் திறம்பட்ட அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு வருகிறது.
கண்காணிப்பு, ஆய்வு, உணவு பொருள்களின் மாதிரியை சோதித்தல் ஆகியவற்றை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் உணவு பாதுகாப்புத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 2006 ஆம் ஆண்டு உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், மற்றும் விதிகளின்படி இப்பொருட்கள் உள்ளனவா என்பதை அதிகாரிகள் சோதனையிடுகின்றனர். உணவு மாதிரிகள் சட்டத்திற்கு உட்பட்ட தரத்தில் இல்லையெனில், சட்டத்தின் அத்தியாயம் ஒன்பதில் காணப்பட்ட தண்டனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிப்பம் செய்யப்பட்ட இயற்கையான மினரல் தண்ணீர், சிப்பம் செய்யப்பட்ட குடிநீர் ஆகியவற்றுக்கு IS 13428 மற்றும் IS 14543 தரத்தின்படி இல்லையென இந்திய தர நிறுவனத்துக்கு புகார்கள் அவ்வபோது வருகின்றன. மேலும் தர நிர்ணய அமைப்பின் உரிமம் இல்லாத உற்பத்தியாளர்கள் இந்த நிறுவனத்திதன் முத்திரைகளை தவறாகப் பயன்படுத்துவது பற்றியும் புகார்கள் வந்துள்ளன.
தர நிறுவனத்தின் முத்திரை பதித்த குடிநீர் பற்றிய புகார்கள் மீது, புகார் கூறியவரிடமும், உரிமம் பெற்ற நிறுவனங்களின் வளாகங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்படுகின்றன.
இந்திய தர நிறுவனத்தின் ஐஎஸ்ஐ முத்திரையை தவறாகப் பயன்படுத்தும் புகார்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையின் முடிவைப் பொறுத்து சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
2016-17 ஆம் ஆண்டில் மாநில / யூனியன் பிரதேச அரசுகளிடமிருந்து FSSAI-க்கு கிடைத்த தகவல் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள், அவற்றின் மீது நடத்தப்பட்ட சோதனைகள், தவறான மாதிரிகள் என காணப்பட்டவை, எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கைகள் ஆகியன கீழே தரப்பட்டுள்ளன.
சேகரிக்கப்பட்ட மாதிரிகள்
|
பகுப்பாய்வு செய்யப்பட்ட மாதிரிகள்
|
கலப்படம் அல்லது தவறான முத்திரை கொண்ட மாதிரிகள்
|
தொடரப்பட்ட வழக்குகள்
|
தண்டனைகள் / அபராதங்கள்
|
குற்றவியல்
|
சிவில்
|
தண்டனைகள்
|
தண்டத்தொகை /அபராதங்கள் ரூ.
|
743
|
697
|
224
|
48
|
83
|
33
|
40/7,05,500
|
இந்தத் தகவலை மத்திய நுகர்வோர் நலன், உணவு, பொதுவிநியோகம் துறை இணையமைச்சர் திரு சி ஆர் சௌத்ரி மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
(Release ID: 1499588)
Visitor Counter : 200