பிரதமர் அலுவலகம்
பிரதமர் பீகார் முதல்வருடன் மாநிலத்தின் வெள்ள நிலவரம் குறித்து ஆலோசனை, அம்மாநில அரசுக்கு அனைத்து உதவிகளும் வழங்க உறுதி
प्रविष्टि तिथि:
14 AUG 2017 1:34PM by PIB Chennai
பீகார் மாநிலத்தில் நிலவும் வெள்ள நிலவரம் குறித்து அம்மாநில முதல்வர் திரு. நிதிஷ் குமாருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
பீகார் மாநிலத்தின் வெள்ள நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரிடரை சமாளிக்க மத்திய அரசு அனைத்து உதவிகளும் வழங்கும் என்றும் பிரதமர் டுவிட்டர் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
“பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன்தான் என் எண்ணங்கள் இருக்கின்றன. அங்குள்ள நிலவரம் கவனமாகக் கண்காணிக்கப்படுகிறது.
வெள்ள நிலவரத்தை சமாளிப்பதற்கு பீகார் மாநில அரசுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு உறுதியளித்துள்ளது. அங்கு சென்றுள்ள தேசியப் பேரிடர் மேலாண்மை படைக்குழுவினர், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்” என்று பிரதமர் கூறினார்.
*******
(रिलीज़ आईडी: 1499579)
आगंतुक पटल : 141
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English