பிரதமர் அலுவலகம்
பிரதமர் அசாம் மாநிலத்தின் வெள்ள நிலவரம் குறித்து முதல்வருடன் ஆலோசனை
प्रविष्टि तिथि:
14 AUG 2017 1:42PM by PIB Chennai
அசாம் மாநிலத்தின் வெள்ள நிலவரம் குறித்து அம்மாநில முதல்வர் திரு. சர்பானந்த சோனோவாலுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்றும் இன்றும் ஆலோசனை நடத்தினார்.
மத்திய அரசு, அசாம் மாநிலத்தின் வெள்ள நிலவரம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரிடரிலிருந்து மீண்டு வர அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகவும் பிரதமர் டுவிட்டர் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
“அசாம் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு துவங்கியதிலிருந்து, மத்திய அரசு, அங்குள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரிடரிலிருந்து மீண்டு வர, தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது” என்று பிரதமர் கூறினார்.
**********
(रिलीज़ आईडी: 1499578)
आगंतुक पटल : 148
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English