பிரதமர் அலுவலகம்
பாரத் பரிக்கிரமா பாதயாத்திரையை வெற்றிகரமாக முடித்த திரு. சீதாராம் கேடிலயா பிரதமரை சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
11 AUG 2017 6:04PM by PIB Chennai
பாரத் பரிக்கிரமா பாதயாத்திரையை வெற்றிகரமாக முடித்த
திரு. சீதாராம் கேடிலயா பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். 2012 ஆகஸ்டு 9ஆம் தேதியன்று, கன்னியாகுமரியில் பாரத் பரிக்கிரமா பாதயாத்திரையை துவக்கிய திரு கேடிலயா, சென்ற மாதம் 9ஆம் தேதியன்று கன்னியாகுமரியில் யாத்திரையை நிறைவு செய்ததாக பிரதமரிடம் தெரிவித்தார்.
யாத்திரையின் போது 9000 கிராமங்களுக்கு தான் நேரடியாக சென்றதாகவும், கூடுதலாக 20,000 கிராமங்களுக்கு யாத்திரையின் செய்தி மறைமுகமாக சென்றடைந்ததாகவும் திரு கேடிலயா கூறினார். லட்சக்கணக்கான விவசாயிகளையும், கிராமத்து இளைஞர்களையும் சந்தித்து உரையாடியதாகவும் அவர் தெரிவித்தார்.
திரு. கேடிலயாவின் முயற்சியைப் பாராட்டிய பிரதமர், அவரது வருங்கால முயற்சிகள் சிறப்பாக நடைபெற வாழ்த்து தெரிவித்தார்.
****
(வெளியீட்டு அடையாள எண்: 1499498)
வருகையாளர் எண்ணிக்கை : 138