பிரதமர் அலுவலகம்

குடியரசு துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடுவை மாநிலங்களவையில் வரவேற்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 11 AUG 2017 9:12PM by PIB Chennai

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே, இந்த அவையின் சார்பிலும் நாட்டு மக்களின் சார்பிலும் மனமார்ந்த பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

இன்றைக்கு, ஆகஸ்ட் 11 ஆம் தேதி, வரலாற்றில் முக்கியமான நிகழ்வை நினைவுபடுத்துகிறது. இந்த நாளில், 18 வயதான ஓர் இளைஞர், குதிராம் போஸ் என்பவர், கொலைக்களத்துக்கு அனுப்பப்பட்டார். சுதந்திரத்துக்கான போராட்டம் மற்றும் தியாகத்தை அது நமக்கு சொல்வதுடன், தேசத்துக்காக நமது பொறுப்பையும் நினைவுபடுத்துகிறது.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு பிறந்தவர்களில் குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் முதலாவது நபராக மரியாதைக்குரிய திரு வெங்கையா நாயுடு இருக்கிறார்.  இப்போதைய சூழ்நிலைக்கு பல ஆண்டுகளாக பழக்கப்பட்ட மற்றும் அவையின் நுணுக்கங்களை  அறிந்த ஒரே குடியரசு துணைத் தலைவராக இருப்பார் என்று நான் நினைக்கிறேன். அனைவரையும், அனைத்து விஷயங்களையும் - கமிட்டி உறுப்பினர்கள் முதல் அவையின் நடவடிக்கைகள் வரை - அனைத்திலும் பழக்கம் உள்ள ஒரு குடியரசு துணைத் தலைவரை நாடு பெற்றிருக்கிறது.

அவருடைய பொது வாழ்க்கை ஜே.பி. இயக்கத்தில் இருந்து தொடங்கியது. தன்னுடைய மாணவப் பருவத்தில், நல்ல நிர்வாகத்துக்காக ஜெயப்பிரகாஷ் நாராயணன் நாடுதழுவிய போராட்டத்தை நடத்தினார். ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு மாணவர் தலைவராக தம்மை அவர் நிரூபித்தார். அப்போதிருந்து சட்டசபையாக இருந்தாலும், மாநிலங்களவையாக இருந்தாலும், தன்னுடைய ஆளுமையை அவர் வளர்த்துக் கொள்ளத் தொடங்கினார்.  தனது களப்பணியை அவர் விரிவுபடுத்திக் கொண்டே இருந்தார். இன்றைக்கு நாமெல்லாம் அவரைத் தேர்வு செய்து, இந்தப் பதவிக்கான பொறுப்பை ஒப்படைத்திருக்கிறோம்.

வெங்கையா அவர்கள் விவசாயி மகனாக இருக்கிறார். பல ஆண்டுகளாக அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. ஒரு கிராமத்துக்காக இருந்தாலும், ஏழைகளுக்காக இருந்தாலும், அல்லது விவசாயிகளுக்காக இருந்தாலும் இந்த விஷயங்களை தீவிரமாக அறிந்து வைத்துக் கொண்டு அனைத்து தகவல்களையும் அவர் அளிப்பார். அமைச்சரவையில் அவர் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.  ஆனால் அமைச்சரவையில் விவாதங்களின் போது, நகர்ப்புற பகுதிகளைவிட, விவசாயிகள் மற்றும் கிராமப் பகுதிகளின் பிரச்சினைகள் பற்றி அவர் அதிகம் பேசியதாக நான் கருதுகிறேன். அவருடைய குடும்பப் பின்னணி மற்றும் அவருடைய குழந்தைப் பருவம் கிராமங்கள் சார்ந்ததாக இருந்ததால் இந்தப் பிரச்சினைகள் அவருடைய மனதைத் தொட்டவையாக இருக்கின்றன.

குடியரசு துணைத் தலைவராக வெங்கையா அவர்கள் பொறுப்பேற்றுக் கொள்ளும் சமயத்தில், ஒட்டுமொத்த உலகையும் அறியப்படுத்த வேண்டியது நம்முடைய கடமையாக இருக்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு பிரச்சினைகளைப் பார்க்க வேண்டிய பொறுப்புகளும் இருக்கின்றன. இந்தியாவின் ஜனநாயகம் மிகவும் பக்குவப்பட்டது. இந்தியாவின் அரசியல்சாதனம் மிகவும் சக்திமிக்கது. இந்தியாவில் அரசியல்சாசனப் பதவிகளில் உள்ளவர்கள் கிராமப் பகுதிகளில் அல்லது ஏழ்மை பின்னணி உள்ள குடும்பங்களில் பிறந்தவர்களாக இருக்கிறார்கள் என்பது முக்கியத்துவம் பெறுகிறது; அவர்கள் வசதிபடைத்த குடும்பங்களில் இருந்து வரவில்லை. பணிவான குடும்பப் பின்னணியில் இருந்தவர்கள் முதன்முறையாக நாட்டின் மிக உயர்ந்த பதவிகளுக்கு வந்திருப்பதே, இந்திய அரசியல்சாசனத்தின் கண்ணியத்தையும், பக்குவ நிலையையும் காட்டுவதாக இருக்கிறது. இந்தப் பெருமை இந்தியாவின் 125 கோடி மக்களுக்கும் கிடைத்துள்ள பெருமை. அந்த வகையில், நமது முன்னோர்கள் நமக்குத் தந்துள்ள பாரம்பர்யத்தை என்னால் தெளிவாகக் காண முடிகிறது.  நமது அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நான் தலை வணங்குகிறேன்.

வெங்கையா அவர்கள் சிக்கனமும், சிறந்த நாவன்மையும் மிக்க மகத்தான ஆளுமை கொண்டவர். அவரிடம் இந்த சொத்துகள் அதிகம் உள்ளன. அவருடைய வாதத் திறமைகள் நமக்கு பழக்கப்பட்டவை. சில நேரங்களில் அவர் தெலுங்கில் உரையாற்றும்போது, அதிவேகமாக அவர் ஓடுவதைப் போல தோன்றும். ஆனால், அதற்கு சிந்தனையில் தெளிவும், பார்வையாளர்களை ஈர்க்கும் திறனும் தேவைப்படும். அது வார்த்தை ஜாலங்கள் கிடையாது; வெறுமனே வார்த்தை ஜாலங்கள் காட்டுவது மட்டுமே யாருடைய மனதையும் தொட்டுவிடாது என்பது, பேச்சுலகில் தொடர்புடைய அனைவருக்கும் தெரியும். ஆனால், தொலைநோக்கு சிந்தனை மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் உறுதியாக ஒருவர் தனது சிந்தனைகளை முன்வைக்கும்போது, மக்களின் மனதை அவர் தொட்டுவிடுகிறார். இந்த விஷயத்தில் வெங்கையா அவர்கள் எப்போதும் வெற்றி பெற்றவராகவே இருக்கிறார்.

ஒரு நாளின் எந்த நேரத்திலும் கிராமப்புற வளர்ச்சிக்காக குரல் கொடுப்பதற்கு அவரைப் போல ஒரு எம்.பி. இன்றைக்கு இல்லை - அது டாக்டர் மன்மோகன் சிங் அரசாக இருந்தாலும் சரி அல்லது என் அரசாக இருந்தாலும் சரி. அதுபோன்ற ஒரு கோரிக்கைதான் தங்கள் பகுதியில் பிரதம மந்திரி கிராம மேம்பாட்டுத் திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தை உருவாக்கியது குடியரசு துணைத் தலைவர், வணக்கத்துக்குரிய வெங்கையா அவர்கள்தான் என்பது அனைத்து எம்.பி.க்களின் பெருமைக்குரிய விஷயமாகும். ஏழைகள், விவசாயி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது பரிவு கொண்ட ஒருவரால் மட்டுமே, அவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உறுதி கொண்டுள்ள ஒருவரால் மட்டுமே இது சாத்தியமாகும்.

இன்றைக்கு, வெங்கையா அவர்கள் நம்மிடையே குடியரசு துணைத் தலைவராக இருக்கிறார். இந்த அவையில் நாம் சரிப்படுத்திக் கொள்வதில் சில பிரச்சினைகள் இருக்கலாம். வழக்கறிஞர்களில் ஒருவர் நீதிபதியாக உயரும் போது, நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பெறும் அனுபவத்தைப் போன்றதுதான் இது; மிக சமீப காலம் வரையில் அவையில் எங்களுடன் விவாதங்களில் பங்கேற்றவராக வெங்கையா அவர்கள் இருந்தார். அவருடன் சக உறுப்பினராகவும் நண்பராகவும் பல ஆண்டுகள் பணியாற்றியவர்கள், சங்கடப்படக் கூடும். ஆனால், இதுதான் நமது ஜனநாயக நடைமுறையின் தனித்துவமான அம்சம். இதற்கு உள்பட்டு நமது செயல்பாட்டு முறையை நாம் உருவாக்கிக் கொள்கிறோம்.

ஜனநாயக அமைப்பு முறையில் இருந்து உயர்ந்துள்ள  இவரைப் போன்ற ஒருவர், மாநிலங்களவையில் பல ஆண்டுகள் இருந்துள்ள ஒருவர்  என்ற வகையில், அவையின் தலைவராக இருந்து நமக்கு பாதையைக் காட்டி வழிநடத்துவார்  என்று நம்புகிறேன்.  எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஆக்கபூர்வமான மாற்றம் வர இருக்கிறது என்று நம்புகிறேன். இன்றைக்கு வெங்கையா அவர்கள் கண்ணியமான பதவியை ஏற்றுக் கொண்டுள்ளார். சில வரிகளை நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன் :

 

’अमल करो ऐसा अमन में, 
अमल करो ऐसा अमन में, 
जहां से गुजरे तुम्‍हारी नज़रें, 
उधर से तुम्‍हें सलाम आए।’’

நான் மேலும் குறிப்பிட விரும்புகிறேன்  -

‘‘अमल करो ऐसा सदन में, 
जहां से गुजरे तुम्‍हारी नज़रें, 
उधर से तुम्‍हें सलाम आए।’’

மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் மிக்க நன்றி! 



(Release ID: 1499492) Visitor Counter : 166


Read this release in: English